Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்


தூத்துக்குடி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (10.01.2019) நடைபெற்றது. 
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்ததாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தில் 26.01.2019 அன்று தருவை மைதானத்தில் நடைபெறவுள்ள 70வது குடியரசு தின விழாவில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்திட வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊர்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.   பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி, மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திட வேண்டும். தியாகிகளை கௌரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, மாணவ, மாணவியர்களை விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து திரும்ப அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள்  பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்திட வேண்டும். விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் தொய்வின்றி மேற்கொண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) அருளரசு, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.பரிதா ஷெரின், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) மகாதேவன், முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா, கோவிந்தராசு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo