Onetamil News Logo

மீன் பிடி படகு 14 நபர்களுடன் வேம்பார் கடலில் ஒதுங்கியது ;கொரோனா சோதனை செய்து அவர்களை மீண்டும் இன்று மாலையில் கடலுக்கு அனுப்பிவைத்தனர். 

Onetamil News
 

மீன் பிடி படகு 14 நபர்களுடன் வேம்பார் கடலில் ஒதுங்கியது ;கொரோனா சோதனை செய்து அவர்களை மீண்டும் இன்று மாலையில் கடலுக்கு அனுப்பிவைத்தனர்.


  தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடலில் இன்று மீன் பிடி படகு 14 நபர்களுடன் வேம்பார் கடலில் ஒதுங்கியது. 
கொரோனா வைரஸ் எச்சரிக்கையை தொடர்ந்து வேம்பார் அருகே உள்ள தீவு நடுக்கடலில்  3 நாட்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த படகு கரை ஒதுங்கிய போது, படகில் உள்ள 2 ஜெனரேட்டர்களில் ஒன்று  பழுதானதால் சிக்கி தவித்த கன்னியாகுமரி மீனவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில்  கரை திரும்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து  படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஜெனரேட்டயில் ஏற்பட்ட  பழுதால் விளக்குகள் எரியவில்லை,இதனால்  அவர்கள் கரை ஒதுங்கினர்.
இதில் கன்னியாகுமரி,கொச்சின்,கொல்கத்தா,கோடியக்கரை ஆகிய  பகுதியைச்  சேர்ந்த 14 மீனவர்களில்  கொச்சின் ஆபிரகாம் மகன் ஜேனஸ் ஆபிரகாம் லிங்கம் சொந்தமான படகில் கன்னியாகுமரி படகு ஓட்டுநர் லாரன்ஸ் மகன் பிரபு (23),ஜோசப் மகன் மாணிக்கம்,கோடிமுனை கமளியான் மகன் ரூபன் ,கோடிமுனையைச் சார்ந்த பெர்கியாஸ் மகன் அருள் (36),விருதுநகர் பணிக்கம் மகன் பாக்கியராஜ் (31),வெல்ல இணையம் சார்ந்த ஜார்ஜ் லூஸ் மகன் சரண்(23),தெய்வேந்திரன் மகன் விஜய் (40),கொல்கத்தாவைச் சார்ந்த மெக்குலதாஸ் மகன்  செந்தில் (32), கொல்கத்தாவைச் சார்ந்த மனோகரதாஸ் மகன் சிபு (20), கொல்கத்தாவைச் சார்ந்த ஜோசன் சிந்ததாஸ் மகன் மெக்குலதாஸ் ,கொல்கத்தாவைச் சார்ந்த லோலுஸ் மகன் பிகான் தாஸ் (34),கோடியக்கரையைச் சார்ந்த மணி மகன் சீசர் ,மாம்சபுரம் மேலூர் சென்ஸ் மகன் அந்தோணி , மாம்சபுரம் மேலூர் சாம்பல் மகன் கடு மாரியப்பன்ஆகியோர் கரை சேர்ந்தனர்.இவர்களை சூரங்குடி போலீஸ் சரக காவல் உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன்,மாணிக்கராஜ், ஆகியோர் அவர்களை  மீட்டு கொரோனா சோதனை செய்து அவர்களை மீண்டும் இன்று மாலையில் கடலுக்கு அனுப்பிவைத்தனர்.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo