Onetamil News Logo

விவசாயிகள் நலம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு, குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

Onetamil News
 

விவசாயிகள் நலம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு, குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்   


 தூத்துக்குடி 2018 அக்டோபர் 10 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு, குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலம் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு, குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  தலைமையில் இன்று (10.10.2018) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின், ஆட்சிக்காலத்தில் தான், வேளாண்மைத்துறைக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கான திட்டங்கள், அதிக அளவில் செயல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தான், வெள்ளம், வறட்சி வந்தபோதும், தொடர்ந்து 5 ஆண்டுகாளாக, தமிழக அரசு வேளாண் உற்பத்தியில் முதலிடத்தை பெற்று மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருது 5 ஆண்டுகள் தொடர்ந்து பெற்று சாதனை படைத்துள்ளது. அரசு மானிய உதவிகளை குறித்த காலத்தில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் பருவ காலத்தில் சாகுபடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டம், மானாவாரி நிலங்கள் மற்றும் தாமிரபரணி தோட்டப்பகுதி என இரு பகுதிகளாக உள்ளது. எனவே, வேளாண் சமந்;தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட உரிய காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வறட்சிக்காலத்திலும், விவசாயிகளுக்கு தேவையான மாற்று வருவாய் திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முழுமையாக செயல்படுத்திட வேண்டும். கடந்த ஆண்டு, காப்பீட்டுத்திட்ட விவசாயிகளுக்கு ரூ.277 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கும், குறித்த காலத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு முழுமையான மகசூழ் பெற வேளாண் அலுவலர்கள் உதவிட வேண்டும். அரசு மானியங்கள், விதைகள் சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்திட வேண்டும். வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் அரசு விவாசயிகளுக்கு செயல்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டங்களின் முழு பயன்களும் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார்   
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
மத்திய. மாநில அரசு விவசாயிகளின் நலன் கருதி அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழக அரசு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.  அதனடிப்படையில், இன்று மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில், சுமார் 2 இலட்சம் விவசாயிகள் உள்ளனர். குறிப்பாக, பொதுப்பணித்துறை (நீர் ஆதாரப்பிரிவு) அலுவலர்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கிட வேண்டும். மேலும், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் வங்கி மேலாளர்கள், வங்கிகள் மூலம் உரிய நேரத்தில் கடன் வசதிகளை விவசாயிகளுக்கு அளித்திட வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயனடைய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் முழுமையாக பெற்று பயன்பெறும் வகையில், துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) புருஸோத்தமன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பாலசுப்பிரமணியம்,  இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) .அருளரசு, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரேவதி, துணை இயக்குநா, தோட்டக்கலைத்துறை சரஸ்வதி, உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியில்துறை பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், முக்கிய பிரமுகர்கள்  அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo