Onetamil News Logo

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டுவீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை ;விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ;கலெக்டர் தகவல்

Onetamil News
 

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டுவீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை ;விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ;கலெக்டர் தகவல்  


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் நலிந்தநிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டுவீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3,000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்
1.    குறைந்தபட்சதகுதி
•    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு
•    இப்போட்டிகளில் முதலிடம்/இரண்டாமிடம் /மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
2.    தகுதியான விளையாட்டுப் போட்டிகள்
•    மைய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள்
•    அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள்
•    இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்டசர்வதேச/ தேசியஅளவிலானவிளையாட்டுப் போட்டிகள்
•    மையஅரசின் விளையாட்;டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டசர்வதேச/தேசியஅளவிலானவிளையாட்டுப் போட்டிகள்
3.    2018 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
4.    விண்ணப்பதாரரின் மாதவருமானம் ரூ.6000/-க்கு (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) மிகாமல் இருத்தல் வேண்டும்.
5.    மையஅரசின் விளையாட்டுவீரர்களுக்கானஓய்வூதியம் அல்லது மைய அரசு /மாநிலஅரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறதகுதி இல்லை.
6.    முதியோருக்கான (Veteran / Masters sports meet விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறதகுதியில்லை. விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in தெங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களைபதிவேற்றம் செய்யவேண்டும். இணையதளத்தில் தங்களது பதிவேற்றத்தினை 21.02.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொண்டுஉரிய விளக்கத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனமாவட்டஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo