Onetamil News Logo

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பூங்கா இடங்களை பல்வேறு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மற்றும் புதிதாக அமைக்கும் பணி 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பூங்கா இடங்களை பல்வேறு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மற்றும் புதிதாக அமைக்கும் பணி         


                                                                                             
தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 9;தூத்துக்குடி  மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பூங்கா இடங்களை பல்வேறு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.                          
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர். ஆல்பி  ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தூத்துக்குடி  மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பூங்கா இடங்களை பல்வேறு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இதன் காரணமாக மாநகராட்சி பூங்காக்களுக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளது.  குறிப்பாக இளம்பருவத்தினர் நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு  காலை, மாலை வேளைகளில் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். ஆரோக்கியத்தை மேம்படுத்த வருகை தரும் இளம்  சமுதாயத்தினரை ஊக்குவிக்கும் விதமாகவும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் ரூ. 35.50 இலட்சம் மதிப்பீட்டில் முத்து நகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா , இராஜாஜி பூங்கா மற்றும் எம்.ஜி.ஆர். பூங்கா  ஆகியவற்றில் வெளிநாடுகளுக்கு இணையாக உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென தெரிவித்துள்ளார்..

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo