Onetamil News Logo

வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொல்ல சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர் அதிரடி; முக்கிய குற்றவாளி ஒருவர் இன்று கைது 

Onetamil News
 

வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொல்ல சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர் அதிரடி; முக்கிய குற்றவாளி ஒருவர் இன்று கைது 



தூத்துக்குடி 2020 மே 31 ;தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொல்ல சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர் அதிரடி முயற்சியால் முக்கிய குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன்  இன்று  வழக்குப்பதிவு செய்து இன்று ஒருவரை கைது செய்தார். 
 பசுபதிபாண்டியன் உறவினர் தூத்துக்குடி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பிரதீப் பாண்டியன் (23), இவா், தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலராக உள்ளாா். தற்போது அவா் குடும்பத்துடன் அந்தப்  பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். வீட்டில் வைக்கப்பட்டிருந்த நவீன நாட்டு வெடிகுண்டு பராமரிப்பின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு  திடீரென வெடித்தது.போன்ற சப்தம் கேட்டதால் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில் தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளா் கலை கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தனர்.அங்கு அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் வெடித்திருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் சுபாஷ் பண்ணையாரை வெடிகுண்டு வீசி கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பது அம்பலமானது.

இச்சம்பவம் குறித்து ;ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் அதிரடி உத்தரவினால் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து, வீட்டின் உரிமையாளரான, பிரதீப் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் மேலும்  5 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் 40 நாட்கள் கழித்து மீளவிட்டான் சுடுகாடு அருகே விஜய் (35), இவர் மீது சென்னை,மற்றும் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி ,கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.தங்கராஜ் (50), இவர் மீது ஆத்தூர் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.இவர்கள் போலீசை கண்டதும் ஓடினார்கள் அப்பொழுது ஒரு சுவரில் இருந்து தவறி விழுந்து இரண்டு பேருக்கும் கை உடைந்து விட்டது.இவர்கள் கோவில்பட்டியில் பொன்.பெருமாள் என்பவரிடம் 15 நாட்டு வெடிகுண்டுகள் விலைக்கு வாங்கியுள்ளனர்.
பண்ணையாரை கொலை செய்ய சரியான சந்தர்பத்திற்க்காக  இவர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.இந்த நிலையில் போலீசில் இவர்கள்  மாட்டிக் கொண்டனர். இந்த வழக்கில் இன்று மேலும்  தளவாய்புரம் ,ஓம் சாந்தி நகர் பொன்ராஜ் மகன் நட்ராஜ்(31), இன்று  கைது செய்யப்பட்டுள்ளார் அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் படைகள் பங்கேற்று மடக்கி பிடித்தனர்.இவர்களை கைது செய்து இன்று பேரூரணி சிறைச்சாலையில் அடைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo