தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி ; 7 நாள் UYEGP பயிற்சி
தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி ; 7 நாள் UYEGP பயிற்சி
தூத்துக்குடி 2019 பிப்ரவரி 8 ;தூத்துக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 16 பயனாளிகளுக்கு 01/02/2019 முதல் 08/02/2019 வரை 7 நாள் UYEGP பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர். மு.துரைசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பயிற்சியின் நிறைவு நாளான இன்று 08/02/2019 அன்று பயிற்சி பெற்ற 16 பயனாளிகளுக்கும் பயிற்சி சான்றிதழ்களை பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர்.மு.துரைசாமி வழங்கினார்கள். பாரத ஸ்டேட் வங்கி ஊரக .சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அசோக் குமார் நன்றியுரை கூறினார். இதில் RSETI பயிற்சியாளர் வீரபுத்திரன், அலுவலக உதவியாளர் ஜான்சிராணி கலந்து கொண்டனர்.