Onetamil News Logo

தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு ;வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி  பொட்டல்காடு  சந்தன மாரியம்மன் கோயிலில் இன்று காத்திருப்பு போராட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு ;வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி  பொட்டல்காடு  சந்தன மாரியம்மன் கோயிலில் இன்று காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ; தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு ;வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி சபொட்டல்காடு  சந்தன மாரியம்மன் கோயிலில் இன்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதால் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி பொட்டல்காடு சந்தன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இன்று காத்திருப்பு போராட்டம் நடந்துவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனம் குலையன்கரிசல், பொட்டல்காடு ஆகிய விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு அந்த பகுதியைச் சார்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். குழாய் ஏற்றி வந்த வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டது. 
மேலும் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனம் வழியாகக் கொண்டு செல்லாமல் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் 48 கண்வாய் கரையோரமாக உப்பாற்று ஓடை வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும், கிராமத்தின் அருகே எரிவாயு குழாய் கொண்டு செல்லக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்த நேரத்தில் அதிகாரிகள் பரிசிலிப்பதாக கூறிச்சென்றனர். 
அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா நோய் பரவியதையடுத்து கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் குழாய் பதிக்கும் பணியை மீண்டும் பொட்டல்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக காவல்துறையினரின் பாதுகாப்புடன் பணியை துவக்கினர். இதனை அறிந்து அந்த பகுதியை சார்ந்த மக்கள் ஊர்த்தலைவர் செல்வசேகர் தலைமையில் கிராம மக்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பணி நடைபெற்றால் பொட்டல்காடு சந்தன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இன்று காத்திருப்பு போராட்டம் நடந்துவருகிறது. இதில் மள்ளர் பேராலயம் தூத்துக்குடி சுபாசினி மள்ளத்தி ,  தமிழர் விடுதலைக் களம் தெற்கு மாவட்ட செயலாளர் தூத்துக்குடி காளிராஜ் ,நாம் தமிழர் மகளிர் பேரவை அன்னலெட்சுமி ,திமுக விவசாய அணி அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான ஆஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் சப்-கலெக்டர் ,தாசில்தார்,வருவாய்த்துறை அதிகாரிகள், எஸ்.பி.ஜெயக்குமார் .டி.எஸ்.பி.கணேஷ் ,காவல் ஆய்வாளர்கள் அன்னராஜ்,உட்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo