Onetamil News Logo

மிளகாய் மற்றும் வெங்காயம் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

Onetamil News
 

மிளகாய் மற்றும் வெங்காயம் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி2018 டிசம்பர் 6 ;தூத்துக்குடி மாவட்டத்தில் மிளகாய் மற்றும் வெங்காயம் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களில் தென்படும்; பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.எல்.சரஸ்வதி அவர்கள் தலைமையில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்இ கிள்ளிக்குளம் உதவி பேராசிரியர்கள் மா.இரவி (பூச்சியியல் துறை) வெ.இராமமூர்த்தி (நோய்யியல் துறை) மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் இணைந்து விவசாயிகளுக்கு நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விவசாயிகளுடன் கலந்துரையாடி வரும் முன் எவ்வாறு காப்பது வந்தபின் எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்கள்.
     மிளகாய்ப் பயிரில் இலைப்பேன் பூச்சிகள் தாக்குதல் குறித்தும் அவை காற்றின் மூலமாக எவ்வாறு வேகமாகப் பரவுகிறது குறித்தும், அதனை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் அகத்தி ஆமணக்கு மற்றும் மக்காசோளம்  பயிர்களை ஊடுபயிர்களாக வளர்ப்பதன் மூலமாக இலைப்பேன் பூச்சிகள் தாக்குதலில் இருந்து ஆரம்ப நிலையில் பயிர்களை பாதுகாக்கலாம் என அறிவுரைகள் வழங்கினார்கள்.
    மிளகாய்ப் பயிரில் இலைப்பேன் பூச்சிகள் ஆரம்பக்கட்ட தாக்குதலில் இருந்து பாதுகாக்க இயற்கை முறையில் வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து (1மூ) 10மில்லி 1லிட்டர் தண்ணீர் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் (5மூ) 50மில்லி 1லிட்டர் தண்ணீரில் கலந்து அதனோடு ஒட்டும் திரவம் 15மில்லி 1லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். 
    மிளகாய் பயிரில் இலைப்பேன் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்பட்டால் அதன் இலைகள் சுருண்டு பச்சை நிறத்தை இழந்து சற்றே சிவந்து காணப்படும். இலைகளும் உதிர்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த உடனடியாக தியோமெத்தாக்ஜம் 25றுஊ மருந்தை 5கிராம் 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது தயாகுளோர்பைரிட் 20மில்லி 10லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மிளகாய் செடிகள் இலை மற்றும் தண்டுகள் நன்கு நனையும்படி மாலை 3மணி அளவில் தெளிக்கும்போது முழுமையாக பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.   
மேற்கண்ட மருந்துகளை சரியான அளவில் சரியான நேரத்தில் தெளிக்கும்போது ஊடு பயிராக பயிரிட்டுள்ள வெங்காயத்தில் காணப்படும் ஸ்போடாப்டிரா லிட்டூரா மற்றும் ஸ்போடாப்டிரா எக்ஸிகுவா என்ற புழுக்களின் தாக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி நல்ல மகசூலினை விவசாயிகள் பெறலாம் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வேளாண் விஞ்ஞானிகளின் இப்பரிந்துரைகளைப் பின்பற்றி விவசாயிகள் தங்கள் மிளகாய் பயிரைப் பாதுகாத்து அதிக மகசூல் பெற மாவட்ட ஆட்சியர் சந்தீப்  நந்தூரி,  அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo