Onetamil News Logo

கிராமப்புற, வீட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள்  உற்பத்தித்திட்டத்தின் கீழ், காய்கறி விதை பொட்டலங்கள் மற்றும் பழகன்றுகள் தேவைக்கு தொடர்பு கொள்க

Onetamil News
 

கிராமப்புற, வீட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள்  உற்பத்தித்திட்டத்தின் கீழ், காய்கறி விதை பொட்டலங்கள் மற்றும் பழகன்றுகள் தேவைக்கு தொடர்பு கொள்க 


தூத்துக்குடி 2019 டிசம்பர் 4 ;முதலமைச்சரின் கிராமப்புற, வீட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள்  உற்பத்தித்திட்டத்தின் கீழ், காய்கறி விதை பொட்டலங்கள் மற்றும் பழகன்றுகள் தேவைக்கு பொது மக்கள் மற்றும் விவாசயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களை அணுகலாம்.         மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது  அறிவிப்பு  ;மனித ஆரோக்கியத்திற்குத் தேவையான சரிவிகித உணவு வழங்குவதில் காய்கறிகளும் பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.  அதன்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளும் 100  கிராம் பழங்களும் உண்ண வேண்டும் என ஆய்வு கூறுகிறது.
தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 207 கிராம்; காய்கறி மற்றும் 197 கிராம் பழங்கள் என்ற அளவில் உற்பத்தி ஆனாலும், நபர் ஒருவருக்கு 103 கிராம் காய்கறிகளும், 79 கிராம் பழங்களும் தான் கிடைக்கின்றன.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்வதற்கும் காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியினை உயர்த்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2018 - 19ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி, 5.8 இலட்சம் ஏக்கர்   பரப்பளவில் காய்கறிப்பயிர்களும், 7.3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பழப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு 60 இலட்சம் மெட்ரிக் டன் காய்கறிகளும், 57 இலட்சம் மெட்ரிக் டன் பழங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  ஒவ்வொரு வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களின் வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற காய்கறி உற்பத்தித்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார்.  காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறிப் பயிர்கள் சாகுபடியையும், 5 ஏக்கர் பழப்பயிர்கள் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 முதலமைச்சரின் கிராமப்புற காய்கறி உற்பத்தித்திட்டத்தின்கீழ், ஒரு கிராம பஞ்சாயத்தில் 100 விலையில்லா காய்கறி விதை தளைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ஒரு விதை தளையிலும்,  கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகல், புடல் போன்ற ஏழு விதமான காய்கறி விதைகளும்,  இக்காய்கறிகளை சாகுபடி செய்வதற்குத்  தேவையான இயற்கை உரமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 38000 காய்கறி தளைகள் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  பழமரக்கன்றுகள் தேவைக்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அணுகலாம்.
மேலும், ஒவ்வொரு விவசாயியும் தங்களிடம் உள்ள விளைநிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்,  தமிழ்நாட்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் , ஒருங்கினைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் , தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்  போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், பழமரக்கன்றுகள், நிழல்வலைக்கூடங்கள், வேளாண் இயந்திரங்கள், மண்புழு தயாரிப்பு மையம், தேனீ வளர்ப்பு,  அறுவடைக்குப் பின்  செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,  பாசனம் பெறும் சாகுபடிப் பரப்பை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக, சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி வருவதால்,  பாசன நீர் உபயோகத்திறனை உயர்த்தி, கூடுதல் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்ய இயலும்.
தமிழ்நாடு மக்களின் உடல் ஆரோக்கித்தை பேணும் வகையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம், அனைத்து விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய இயலும் என்பதால், இந்த வாய்ப்;பை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo