Onetamil News Logo

திடீர் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கிடவேண்டுமென நாம் இந்தியர் கட்சி கோரிக்கை 

Onetamil News
 

திடீர் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கிடவேண்டுமென நாம் இந்தியர் கட்சி கோரிக்கை 


தூத்துக்குடி 2020 மே 21 ;தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கிடவேண்டுமென நாம் இந்தியர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேரூரணி ஜெயகணேஷ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயமே முக்கியத்தொழிலாக இருந்து வருகிறது.
மாவட்டத்தின் தென்பகுதிகளில் தாமிரபரணி பாசனத்தை நம்பியும், மாவட்டத்தின் வடபகுதிகள் மற்றும் வறட்சி நிறைந்த பகுதிகளில் நிலத்தடிநீர் ஆதாரத்தை கொண்டும் விவசாய சாகுபடி பணிகள் காலகாலமாக நடந்து வருகிறது.
நமது மாவட்டத்தை பொறுத்தவரை நெல் பயிர் சாகுபடியை காட்டிலும் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவற்றால் வாழை சாகுபடியானது கடந்த சில வருடங்களாக மிகப்பெரும் சரிவை சந்தித்து வருவதால் வாழை விவசாயிகள் கடும் நெருக்கடியான சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புயல் காரணமாக திடீரென சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு விளைச்சலுக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் மற்றும் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைகள் அனைத்தும் அடியோடு முறிந்து விழுந்து விட்டது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு உத்தரவால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருந்த வாழை விவசாயிகள் தற்போது சூறைக்காற்றுக்கு அனைத்து வாழைகளையும் பறிகொடுத்து வாழ்வதற்கு வழியில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாங்கிய வட்டி கடன், வங்கிகளிலுள்ள நகைக்கடன் போன்றவற்றை செலுத்தமுடியாமல் தினம் தினம் பரிதவித்து வரும் வாழை விவசாயிகள் திடீர் சூறைக்காற்றால் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போயுள்ளனர். தற்போதுள்ள சூழலில் வாழை விவசாயிகளை பாதுகாக்கவேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
எனவே சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வாழை விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வீதம் இழப்பீடு வழங்கிடவேண்டும். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் ஒரு வாழைக்கு ரூ.500வீதம் கணக்கிட்டு அதன் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்கிடவேண்டும். மேலும் விவசாயிகளின் வங்கி கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo