Onetamil News Logo

கொரோனா பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் அ.சற்குணராஜ் தகவல்

Onetamil News
 

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிள் ஈடுபட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட தயாராக  இருப்பதாக  தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு .ஒருங்கிணைப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் அ.சற்குணராஜ் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி, ஜூலை 12,ஞாயிற்றுக்கிழமை  2020: கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிள் ஈடுபட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட தயாராக  இருப்பதாக  தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு .ஒருங்கிணைப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் அ.சற்குணராஜ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.....பொதுமக்கள் உயிரை பாதுகாக்கும் பணியில் தான் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பொதுமக்கள் தான். அவர்களும் பொதுமக்கள் என்பதில் உள்ளடங்குவார்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு சாதனங்கள் வழங்கிடுவோம் என்றும்,அவர்களுடைய பாதுகாப்பை , தமிழக அரசு உறுதி செய்தால், அரசு ஊழியர்கள் மற்றும ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிட தயாராக  வழங்க உள்ளோம்.. மேலும் தற்போது கல்வித் துறையின் மூலம் எடுத்து வரும் ,இதர பணிகளை  பார்த்துக்கொண்டால் , அவருடைய பணிகளையும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட நாங்கள் தயார்..... கொரோனா தொற்று இறப்பை அதிகரிக்க செய்யக் கூடிய நோய் என்பதால் தமிழக அரசு  எங்களை தேவையான அத்தியாவசிய  பணிகளான விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு சம்பந்தப்பட்ட பணிகள் ,மாணவர்கள் விபரங்களை EMIS போன்றவற்றில் அப்டேட் செய்தல், +2 தேர்வு எழுதாத  மாணவர்களை +2  தேர்வுகளுக்கு தயார் செய்தல்,தேர்வு மையங்களை தயார் செய்தல்,தற்போது மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குதல், +2 மாணவர்களுக்கு +2 பாட சம்பந்தமான  தரவுகளை மடிட்கணினியில்  பதிவேற்றம் செய்தல், போன்ற அலுவல உதவியாளர் இல்லாத பள்ளிகளில், கல்வித் துறை கேட்கும் விபரங்களை, பள்ளியில் இருந்து தயார் செய்து அனுப்புதல், நீட் பயிற்சி வகுப்புகளுக்கு பாடம் எடுத்தல் போன்ற பல்வேறு பணிகளில்  ஈடுபடுத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கொரோனா தொற்று தீவிரமடைந்து இருக்கும் நேரத்தில், எமது ஆசிரியர்கள், எங்களுடைய +2 மாணவர்கள் நலன் கருதி ,விடைத்தாள் திருத்தும் பணியை சிறப்பான முறையில் முடித்து கொடுத்து, தற்போது அவர்களுடைய தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை தயாராக இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயாராக இருந்தால், ஆசிரியர்கள் வேலை பார்க்க தயார்.எப்போதும் தயாரான நிலையில் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும்  கல்வித்துறை தயாராகவே இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo