Onetamil News Logo

வயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,  அட்ஜஸ்ட்  பண்ண கத்துக்குவோம்.

Onetamil News
 

வயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், 
அட்ஜஸ்ட்  பண்ண கத்துக்குவோம்.


20 வயசுக்கு அப்புறம், வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், 
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணுதான். கொஞ்ச நாள் ச‌ரியா தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்.
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான். குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க.
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், 
கரும் புள்ளிகள் வந்துரும்.
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான். ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான்.
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணுதான். மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்.
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..! அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்.
 90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாம் ஒண்ணு தான் ! ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்.
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான். நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது.
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்.. என்ன இருக்கோ, அதை வைத்து  சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்டுவிடுவோம்.
இல்லாததை அடைய‌ திட்ட‌மிட்டு உழைப்ப‌து வேறு, வீணே க‌வ‌லைப்ப‌டுவ‌து வேறு.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo