Onetamil News Logo

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு 


தூத்துக்குடி 2020 ஜூலை 30 ;தூத்துக்குடியில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர்  டாக்டர் கல்யாணராமன் (55) இவர் ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 
 தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்று மொத்தம் 6812 பேருக்கு இருப்பது தெரியவருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இறந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை  370 பேர் குணமடைந்து இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 4494 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  2272 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிக்சை பெற்றுவருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo