Onetamil News Logo

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர்-யிடம்  கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர்-யிடம்  கோரிக்கை  


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 18 ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருச்செந்தூர் பட்டர்குளம் தெருவை சேர்ந்த பொதுமக்கள்  கலெக்டர்-யிடம்  புகார்  தெரிவித்தனர்.  
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி  தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். 
திருச்செந்தூர் பட்டர்குளம் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்,  மனுவில் கூறியதாவது...  எங்கள் பகுதியை சேர்ந்த 117 பேருக்கு 2005-ம் ஆண்டு திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி முட்செடிகள் அடர்ந்து உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அங்கு மழைநீர் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு வீடுகட்ட முடியாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை சீர்செய்து சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo