Onetamil News Logo

 புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா ;தமிழக முதலமைச்சர் வருகை எதிரொலி ;நாளை 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் ஹோட்டலில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் 

Onetamil News
 

 புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா ;தமிழக முதலமைச்சர் வருகை எதிரொலி ;நாளை 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் ஹோட்டலில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் 


தூத்துக்குடி 2020 செப்  19 ; தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதலமைச்சரை வரவேற்பது குறித்த, அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்பு.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு வருகிற (22.09.2020) செவ்வாய்கிழமை தூத்துக்குடி வருகைதரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நாளை (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி வருகைதரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சிறப்பாக வரவேற்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட கழக நிர்வாகிகள், தெற்கு மாவட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo