Onetamil News Logo

வரும் 23ம் தேதி விளாத்திகுளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P.கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கை

Onetamil News
 

வரும் 23ம் தேதி விளாத்திகுளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P.கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கை       


  தூத்துக்குடி 2019 ஜூன் 17 ; தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P.கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கை விடுத்துள்ளார்.
    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் வரும் 23ம் தேதி விளாத்திகுளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  
    இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P.கீதாஜீவன் எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியிருப்பதாவது....ஆளும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மழைக்காலத்தில் வருகின்ற தண்ணீரை முறையாக குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாராத காரணத்தால் சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்தது. குடிமராமத்து  என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கி அதன் வேலை முடிந்ததாக கணக்கு காட்டி அ.தி.மு.க.வினர் பணத்தை சுரண்டியதால் வந்ததன் விளைவே இதுவாகும்.


    அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி குடிநீர் பிரச்சனையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடிப்பதற்கு தண்ணீரின்றி பொதுமக்கள் வைப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்தால் அதிகாரிகள் அதையும் மனசாட்சியின்றி மூடியுள்ளார்கள். அதே நேரத்தில் போர் போட்டு மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.

    விளாத்திகுளம் தொகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை கேள்விபட்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல்கட்டமாக கடுமையான குடிநீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பகுதிகளான கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம், குமரிகுளம், விருசம்பட்டி, ளு.ஏ.புரம், பெரியசாமிபுரம், கலைஞானபுரம் பகுதிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    இது நிரந்தர தீர்வு ஆகாது என்பதால் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு விளாத்திகுளம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டமானது மாநில மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான திருமதி.கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் மாவட்ட பொறுப்பாளராகிய (P.கீதாஜீவன் எம்.எல்.ஏ ) நான் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

    பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அதில் கூறியுள்ளார்.
   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo