Onetamil News Logo

சபீதா பானு உடலை பிரேத பரிசோதனையின்றி ஒப்படைக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் , பெண்கள் திரண்டு வந்து சாலை மறியல்

Onetamil News
 

சபீதா பானு உடலை பிரேத பரிசோதனையின்றி ஒப்படைக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் , பெண்கள் திரண்டு வந்து சாலை மறியல்  


  தூத்துக்குடி 2019 மே 17 ;தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதியில் முஸ்லீம் பெண் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.  உடலை பிரேத பரிசோதனையின்றி ஒப்படைக்க வலியுறுத்தி தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில்  உறவினர்கள் மாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் பீர்முகமது மனைவி சபீதா பானு (24) என்ற இளம்பெண் நேற்று மாலையில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது மரணம் அடைந்துள்ளார். அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தேக மரணம் என்று கூறி தூத்துக்குடி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அவர் மரணம் இயற்கையாக மரணம் அடைந்ததால் அவரை பிரேத பரிசோதனையின்றி உடலை ஒப்படைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியதாக  கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி சப் கலெக்டர் அவரது உடலை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டாராம். அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.  பிரேத பரிசோதனையின்றி உடலை ஒப்படைக்க வலியுறுத்தி தூத்துக்குடி திருநெல்வேலி சாலையில்  அப்பெண்ணின் உறவினர்கள், இஸ்லாமிய அமைப்பினர் , பெண்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo