Onetamil News Logo

தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய போலிஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

Onetamil News
 

தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய போலிஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு


தூத்துக்குடி 2020 செப் 14 ;தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்  ஆய்வாளர்;  உட்பட 7 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 07.04.2016  அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் சம்மந்தபப்ட்ட எதிரிக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்ட முறப்பநாடு காவல் நிலைய குற்ற பிரிவு அயல்பணி: விமான நிலையம், வாகைக்குளம் ஆய்வாளர் விமலா, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சுமதி மற்றும் பெண் முதல் நிலைக் காவலர் ஹெப்சி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 10.09.2020 தாளமுத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கே.வி.கே சாமி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த சோலையப்பன் மற்றும் ராஜா ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்த 4 கிலோ எடையுள்ள  கஞ்சாவை பறிமுதல் செய்தும், இவர்களுக்கு பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வரச் சொன்ன லதா என்பவரையும் கைது செய்ய உதவியாக இருந்த தாளமுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 08.09.2020 அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட முக்காணி பகுதயில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்ட்ட எதரிகளான மாரியப்பன் மற்றும் தங்கராஜை சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்திற்குள் கைது செய்ய உதவியாக இருந்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மாணிக்கராஜ் மற்றும் தலைமைக் காவலர் ஜேக்கப் தங்கமோகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆய்வாளர் உட்பட 7 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo