Onetamil News Logo

பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு  ; தூத்துக்குடியில் மக்களை பாதுகாக்கும் போலீசார்

Onetamil News
 

பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு  ; தூத்துக்குடியில் மக்களை பாதுகாக்கும் போலீசார்


தூத்துக்குடி 2020 மார்ச் 22 ;கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் சங்கிலியை உடைக்க "மக்கள் ஊரடங்கு உத்தரவு" அல்லது சுயமாகத் தனிமைப்படுத்தலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று தமிழகத்தில் அமைதிநிலை உருவானது. இந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 
சீன நாட்டின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், மற்ற நாடுகளுக்கு பரவி விடாமல் இருக்க பெருமுயற்சி நடைபெறுகிறது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்றைய நிலையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் வரும் காலங்களில் தான் இதன் முழு தாக்கம் புரியும். வைரஸ் நோய் உலகை அச்சுறுத்துவது ஒன்றும் புதிதல்ல.
கொரோனா தாக்கம் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு ? 22.03.2020
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 2,89, 996 பேர்கள்.
இதில் பலியானவர்கள் 11,949 பேர்கள். குணமடைந்தவர்கள் 93,617 பேர்கள்
இத்தாலி பாதிக்கப்பட்டவர்கள் : 47,021
பலியானவர்கள் : 4,032
குணமடைந்தவர்கள் : 5,129
சீனா பாதிக்கப்பட்டவர்கள் : 81,008
பலியானவர்கள் : 3,255
குணமடைந்தவர்கள் : 71,740

ஈரான் பாதிக்கப்பட்டவர்கள் : 20,610
பலியானவர்கள் : 1556
குணமடைந்தவர்கள் : 7,635
ஸ்பெயின் பாதிக்கப்பட்டார்கள் : 25,374
பலியானவர்கள் : 1,378
குணமடைந்தவர்கள் : 2,125
பிரான்ஸ் பாதிக்கப்பட்டவர்கள்: 12,612
பலியானவர்கள் : 450
குணமடைந்தவர்கள் : 1587
அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்கள்: 21,852
பலியானவர்கள் : 279
குணமடைந்தவர்கள் : 147
இங்கிலாந்து பாதிக்கப்பட்டவர்கள் :4,094
பலியானவர்கள் : 177
குணமடைந்தவர்கள் : 65
நெதர்லாந்து பாதிக்கப்பட்டவர்கள் : 3,631
பலியானவர்கள் : 136
குணமடைந்தவர்கள் : 2
தென் கொரியா பாதிக்கப்பட்டவர்கள் : 8,799
பலியானவர்கள் : 102
குணமடைந்தவர்கள் : 2,612
பாகிஸ்தான் பாதிக்கப்பட்டவர்கள் : 720
பலியானவர்கள் : 3
குணமடைந்தவர்கள் :13
இந்தியா பாதிக்கப்பட்டவர்கள் : 320
பலியானவர்கள் : 4
குணமடைந்தவர்கள் : 23                                                                                                                                                         

இதில் கொரோனா வைரசின் அறிகுறிகள்  வைரஸ் போன்ற அறிகுறிகள் தான். சார்ஸ் தொற்று அறிகுறி இருப்பதாகக் கூறிய உகான் மருத்துவரான லீ லென்லியாப் என்பவரை சீனா காவல் துறையினர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் அவரும் இந்த நோயால் இறந்துவிட்டார். பெரும் நோய்கள் மனித குலத்தை அழித்த நிகழ்வுகள் வரலாற்றில் பல உண்டு. 1347 முதல் 1351 வரை உலகை அச்சுறுத்திய பெரும் கொள்ளை நோயால் சுமார் 20 கோடி மக்கள் இறந்தார்கள். லண்டனில், இந்த பெருநோய் 1665-ம் ஆண்டு லட்சம் பேரைக் கொன்றது. இதே சீனாவில் 1855-ம் ஆண்டு, உகான் நகரில் உருவான கொள்ளை நோய் எலிகள் மூலமாக பரவி இந்தியா மற்றும் சீனாவில் 150 லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.
அன்றைய கால கட்டத்தில் இந்த நோய்கள் வானிலிருந்து மனிதனை மிரட்ட அனுப்பட்ட நோய் என்று மத குருமார்கள் சொல்லி வந்தனர். பேய், பிசாசு, முனி இதற்கு காரணம் என்றும் பாமர மக்களின் நம்பிக்கைகள். இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படும் விதம், இவற்றை ஏற்படுத்தும் காரணி போன்றவை நமக்கெல்லாம் தெரிய வைத்தவர்கள் மாபெரும் உயிரியல் விஞ்ஞானிகள். அதில் லூயி பாஸ்டர், ராபர்ட் கோச் போன்ற உயிரியல் அறிஞர்களுடைய “நுண்ணுயிரிகள் நோய்களுக்கான காரணி” என்ற கோட்பாடு புரட்சியை ஏற்படுத்தியது. மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா போன்ற கிருமிகள் என்றார்கள் இவர்கள். எடுத்துக்காட்டாக பாக்டீரியா நுண்ணுயிரி, என்புருக்கி, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படுத்தும். வைரஸ் நுண்ணுயிரி, பெரியம்மை, சளி, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்தும். நாம் இப்போது எதிர்கொள்ளும் கொரோனாவும் ஒரு வைரஸ் நோய்தான்.
பாலை கொதிக்க வைத்து பின்னர் திடீரென குளிர்படுத்தினால் நோய்க் கிருமிகள் செத்துவிடும் என்றும் லூயி பாஸ்டர் கண்டறிந்தார். எட்வர்டு ஜென்னர் என்பவர் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததும், ஜொனால் சார்க் என்பவர் இளம் பிள்ளை வாத நோய்க்கு மருந்து கண்டுபிடித்ததும் பெரிய மருத்துவ புரட்சியாக அமைந்தன.
இந்திய நாட்டு மக்களை தாக்கிய மலேரியா நோய் ‘புரோட்டோசோவா’ என்ற தொற்று கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்தவர் ரொனால்டு ரோஸ் என்ற சென்னையில் வேலைபார்த்த ஆங்கிலேய மருத்துவர் ஆவார். அந்த அனாப்லஸ் கொசுவை குன்னூரில் பிடித்து ஆய்வு செய்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
உண்மை இப்படியிருக்க, பல நாடுகளிலும் உள்ளூர் மருத்துவர்கள் எந்த நோயைப்பற்றி தகவல் வந்தாலும் அந்த நோய்க்கு அவர்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிவித்துவிடுகிறார்கள். அதையும் பாமர மக்களும் நம்பி விடுகிறார்கள். நமது நாட்டு முன்னோர்களின் மருத்துவ முறை எவ்வளவு உயர்ந்தது என்றும் பேசி மகிழ்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட உரிமைகோரிக்கையில் எந்த ஆதாரமும் இருக்காது. உள்நாட்டு மருந்துகளால் இங்கே ஒருவருக்கு குணமாகிவிட்டது, அங்கே ஒருவரை குணப்படுத்தினேன் என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள்; . பாமரர்கள் இதை நம்பிவிட்டாலும் அறிவியல் அறிஞர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் இவை ஆய்வுக்கு உட்படுத்தாத, போகிற போக்கில் சொல்லப்பட்ட வெற்று கண்டுபிடிப்புக்கள். புதிய வைரஸ் நோயின் தன்மை, அது உடலில் பரவும் விதம், அதன் வேதியியல் தன்மை, அதன் உடல் அமைப்பு, அதன் மறு உருவம் போன்றவற்றை ஆராய பல நூறு மருத்துவர்கள், பலவித நுண்நோக்கிகள், பல நோயாளிகள், பல நூறு கோடி ரூபாய்கள் செலவாகும். அதற்குப் மேலாக, இது பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். இப்படிப்பட்ட முயற்சியின் பின்னர்தான் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதுவரை இன்றும் மருந்து கண்டுபிடிக்கவில்லை, முயற்சிக்கிறோம் என்றுதான் விஞ்ஞானிகள் கூறுவார்களே தவிர, பாரம்பரிய வைத்தியர்கள் போல எங்களிடம் மருந்து தயாராக உள்ளது என்று பொறுப்பற்ற பதிலை கூறிவிடமாட்டார்கள். 
தொற்று நோய் என்பது மக்களின் உயிருடன் விளையாடும் நோய் என்பதால் அறிவியல் மருத்துவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகளைத்தான் நாம் அறிவியல் பாடப்புத்தகத்தில் படிக்கிறோம். அவர்களை நாம் மதிக்க வேண்டும். நமது நன்மைக்காக அதை நாம் செய்ய வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo