Onetamil News Logo

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு

Onetamil News
 

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு


தூத்துக்குடி 2019   ஏப் 23 ; இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில், கடல் வழியில் இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை உள்ளதால், அங்கிருந்து நமது நாட்டுக்குள்ளும் பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இந்தியாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் இன்று 3வது நாளாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 தீவிரவாத அமைப்புகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வாண் தீவு, காசு வாரி தீவு, பாண்டியன் தீவு, ஆகிய தீவுகளில் அன்னிய படகுகள் ஊடுருவல் உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி, மண்டபம், காரைக்கால் ஆகிய இடங்களில் கடலோரக் காவல்படை மையங்களில் உள்ள அனைத்துக் கப்பல்களும், விமானங்களும் முழுவீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்த உடனேயே கடல் பகுதி எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo