Onetamil News Logo

ஸ்டெர்லைட் விஷயத்தில் ஆர்வம் காட்டிய கட்சிகள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடமாற்றத்தில் ஏன்? ஆர்வம் காட்டவில்லை  

Onetamil News
 

ஸ்டெர்லைட் விஷயத்தில் ஆர்வம் காட்டிய கட்சிகள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடமாற்றத்தில் ஏன்? ஆர்வம் காட்டவில்லை   



தூத்துக்குடி,2019 ஜூன் 19 ;ஸ்டெர்லைட் விஷயத்தில் ஆர்வம் காட்டிய கட்சிகள் தூத்துக்குடி பேருந்து நிலையம் இடமாற்றத்தில் ஏன்? ஆர்வம் காட்டவில்லை 
  தூத்துக்குடி  நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பழைய பேருந்து நிலையம், விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான  தூத்துக்குடி  நாளுக்கு நாள் வாகனப்  போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன. 
தூத்துக்குடி வளர்ச்சியை தடுத்தது யாருங்க? தூத்துக்குடி மேம்பட தடுத்தது யாருங்க?  ;சட்ட உரிமைகள் இயக்க நிறுவன தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் கூறியதாவது...தூத்துக்குடி வளர வேண்டுமென்றால் தூத்துக்குடி விரிவாகனும் அப்பொழுது தான் மாநகரமாகும், உதாரணத்திற்கு திருநெல்வேலி,மதுரை விரிவடைந்ததற்கு முழுக்காரணம் கோர்ட் வெளியே கட்டப்பட்டு செயல்படுகிறது,மாட்டுத்தாவணி பேரூந்துநிலையம் வெளியே கொண்டு செல்லப்பட்டது, இதுதான் முழுக் காரணமாகும்.ஆகையால் தூத்துக்குடி வளரவேண்டும் என்றால் ரயில் நிலையம் மீளவிட்டானுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்,பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வெளியே கொண்டு செல்ல வேண்டும் அப்பொழுது தான் புதுக்கோட்டை வரை தூத்துக்குடி மாநகரம்  விரிவாகும் 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் ,வி.வி.டி மேம்பாலம் போன்றவை அமைத்து தர  ஆணை பிறப்பித்தார். இதற்க்காக மீன் வளக்கல்லூரி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இடமாற்றம் செய்யப்படவில்லை, அதுபோல இரயில் நிலையம் இடமாற்றம் செய்ய மத்திய அரசு முனைந்து செயல்பட்டது ஆனால் அதற்கும் தடை போட்டனர்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, காவல் துறையினர் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சிக்னல்கள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மேலும், நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வாகன தணிக்கை நடத்தி, அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலை விதிகளை மீறியும் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
 அரசு, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற இலகு ரக வாகனங்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதுதவிர, விதி மீறும் வாகன ஓட்டுநர்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, தூத்துக்குடியில்  மாலை  முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு  முக்கியக் காரணமாக பழைய பேருந்து நிலையம்,கோர்ட்,தாலுகா அலுவலகம்,புதிய பேருந்து நிலையம்,இரயில் நிலையம்,1ம் கேட் ,2ம் கேட்,4ம் கேட் போன்றவை  காரணமாக  உள்ளன.
தூத்துக்குடியில் - ஆம்னி பேருந்து நிலையம் இல்லாதது ஒரு குறையாகும்.. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், சென்னை,  திருச்சி,  வேலூர் ,வேளாங்கண்ணி, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
தினசரி 300க்கும் மேற்பட்ட பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.   

 பழைய பேருந்து  நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் குறித்து தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம்   நிர்வாகிகளுள் ஒருவரான ஜவகர்  கூறும்போது, “பழைய  பேருந்து நிலையம், நகரின் முக்கியப் பகுதியில் இருப்பது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கிறது. இந்த  பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் முறையாக இயக்கப் படுவதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுவனமும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட கூடுதல் இடத்தை ஆக்கிர மித்துள்ளது. மேலும், பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கு மட்டுமே இந்த பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகராட்சி விதிகளை மீறி, பேருந்துகள் செயல்படுகிறது.
இதுதவிர, தூத்துக்குடியில் ஆம்னி பேருந்துகள், நிறுத்த பேருந்து நிலையம் இல்லை, ஆம்னி  பேருந்துகள் வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும், பெரியதாக உள்ளது. இதனால் ஒரே சாலையில் இரண்டு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து நிறுத்தும்போது, அவ்வழியாக பிற எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு,  நெருக்கடி அதிகரிக்கிறது.
வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் நிறைந்த தூத்துக்குடியில்  பேருந்து நிலையம்  முக்கிய சந்திப்பில் இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி, அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, பழைய  பேருந்து நிலையம் இடத்தை , மாநகருக்கு வெளியே மீன்வளக்கல்லூரி-க்கு அருகில் உள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும்.தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம்  கொண்டுவர வேண்டும் என்றார்.
                                                                                                                          
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo