அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி
தூத்துக்குடி 2019 மே 22 ;தூத்துக்குடியில், கடந்த ஆண்டு இதே நாள் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் அலுவலகம் முன்பு படங்களுக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மீனவரணி செயலாளர் ரோஜா ராஜ், வக்கில் அணி செயலாளர் குமார், அமைப்புச்சாரா ஓட்டுநரணி செயலாளர் இச்ககி செல்வம், துணைச் செல்வம் முத்துமாலை, தொழ்ற்சங்க தலைவர் சண்மககுமாரி, மகளிரணி துணைச் செயலாளர் விஜயலெட்சுமி, பொன்ராஜ், நிர்வாகிகள் முனியசாமி, கார்த்தி, அ.ம.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம், சுடலைமுத்து, சசி, இன்னாசி, அமலநாதன், செல்வராஜ், சக்திவேல், மருது, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.