Onetamil News Logo

ஒரு தந்தை தன் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே அந்த குழந்தையின் ஒழுக்கம் ஆரம்பமாகின்றது.

Onetamil News
 

ஒரு தந்தை தன் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே அந்த குழந்தையின் ஒழுக்கம் ஆரம்பமாகின்றது.


தூத்துக்குடி 2019 ஜூன் 18 ;அம்மாவின் அன்பு தோசை மாதிரி ,அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி
தோசையின் ருசி அனைவருக்கும் தெரியும் ஆனால் தோசைக் கல்லின் தியாகம் யாருக்குமே தெரியாது.....
நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.
அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.
 குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டதன் தாக்கமே தந்தையின் கோபம். சற்று யோசித்துப் பார்த்தால் அவரின் கோபத்திலும் நியாயம் கலந்து இருக்கும்.
அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்.
சிறந்த தகப்பன் என்பவன் தன் வாழ்க்கையில் சந்தித்த தடுமாற்றங்களையும், அனுபவங்களையும் தன் பிள்ளை சந்திக்கக் கூடாது என்று நினைப்பவன்.
என் வாழ்க்கையில் நான் அடைந்த வெற்றிக்குள் அடங்கி நிற்கிறது என் தந்தை எனக்காக செய்த தியாகங்கள், கஷ்டங்கள்.
வாழ்க்கை என்பது மிக எளிது நமக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் நம் தந்தையாக இருந்தால்.
நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது தந்தையைத் தவிர இந்த உலகில்.
பொறுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல நீ ஒரு அப்பாவாகும் சமயம் அதை நீ கட்டாயம் உணர்வாய்.
முயற்சி என்பது எல்லா விஷயங்களிலும் நாம் போராடிப் பார்ப்பது ஊக்குவிப்பு என்பது நமக்காக இருக்கும் ஒரு ஜீவன்(அப்பா) நம்மை மனதளவில் பலப்படுத்துவது.
தன்னுடைய ஆழமான அன்பை உள்ளே மனதில் பூட்டி வைத்துக் கொண்டு வெளியே தன் மகன் எதிரியாய் நினைத்தாலும் அவன் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் தந்தை போல் யாரேனும் உளரோ இந்த உலகிலே…!
“எவ்வளவு செலவு ஆனாலும் சரி நான் இருக்கிறேன் நீ உனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்து எடுத்துப் படி” – என்று சொல்லும் மனம் தந்தையைத் தவிர வேறு எவருக்கு வரும்?
தந்தையும் மகனும் நண்பர்களாகப் பழகினால் அந்த உறவு இறைவனால் கிடைக்க பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும்.
ஒரு தந்தை தன் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே அந்த குழந்தையின் ஒழுக்கம் ஆரம்பமாகின்றது.
என் தேவையை உணர்ந்து குறை ஒன்றும் இல்லாமல் சக்திக்கு மீறி இருந்தாலும் மனமுவந்து செய்யும் நம் தந்தை எனும் தெய்வம் இந்த உலகில் வாழ்வதால் தான் என்னவோ இன்னமும் பாசம் என்ற ஒன்று வாழ்ந்து வருகிறது.
தந்தை கடிந்து கொள்வதை பொறுத்து கொள்ளும் மகனே நாளைய தலைமுறையின் நாயகன்.
ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதம் சுமக்கிறாள் கருவறை வரையில், தந்தை பிள்ளையை சுமப்பான் தன் கல்லறை வரையிலும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo