Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் 


தூத்துக்குடி 2018 டிசம்பர் 7; தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.877.00/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.875.50/- ஆகவும், கழுகுமலையில் ரூ.883.50/- ஆகவும், கயத்தாரில் ரூ.879.00/- ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.875.50/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.893.50/- எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.877.00/- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.877.00/- எனவும், 01.12.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo