Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட அதிமுக, திமுக மல்லுக்கட்டு

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட அதிமுக, திமுக மல்லுக்கட்டு


தூத்துக்குடி 2019 ஜூன் 16 ;தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகின்றன.  புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பெரியசாமி  அதிமுகவில் ஜெபராஜ் சித.செல்லப்பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட பலர் பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.                                                                                                                                                                                                           மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  நிர்வாக வசதிக்காக என அதிமுக, திமுக தலைமை ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாக பிரித்து தெற்கு, வடக்கு  என பிரித்துள்ளனர்.   
  பெரியசாமி மறைந்த பின்னர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வும் அவருக்கு ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதியும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மறைந்த பெரியசாமியின் மகள் கீதாஜீவன் எம்.எல்.ஏ-வும் அவருக்கு தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதியும் ஒதுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.  
 ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் வரை சித.செல்லப்பாண்டியன் பணியாற்றி வந்தார்.  மார்ச் 01ம் தேதி மாவட்டத்தை இரண்டாக பிரித்து வடக்கு, தெற்கு என உருவாக்கப்பட்டு கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகள் அடங்கிய வடக்கு மாவட்ட செயலாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ-ம் தூத்துக்குடி திருவைகுண்டம், திருச்செந்தூர் அடங்கிய தெற்கு மாவட்ட செயலாளராக எல்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ-வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து தனியாக பல அணிகள் இயங்கி வருகின்றன.  இந்த சூழ்நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாரை நிறுத்தினாலும் உள்குத்து வேலையின் மூலம் திமுக வேட்பாளர்கள் தோற்கடித்துவிடுவார்கள் என்ற  எண்ணத்தில் திமுக தலைமை கழகம் தலைவர் ஸ்டாலினின் தங்கை கனிமொழி-யை வேட்பாளராக அறிவித்து  மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.  இதற்கிடையில் அதிமுகவினரை  முழுமையாக நம்பி இருந்த கூட்டணி கட்சியின் பாரதிய ஜனதா  கட்சி தமிழக மாநிலத்தலைவர்  தமிழிசை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  இந்த  பரபரப்பு அடங்குவதற்குள் உள்ளாட்சி  தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை ஒட்டி இரண்டு பிரதான கட்சிகளும் தங்களது பணிகளை துவக்கியுள்ளனர்.  அதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியையும் கோவில்பட்டி நகராட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றி ஆக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.    
 தூத்துக்குடி  மாநகராட்சி மேயர் பதவியை பிடிப்பதற்கு  60 வார்டுகளிலும் தங்களது வாக்கு வங்கிகளை பெறுவதற்கு அந்த பகுதியில் உள்ள அதிமுக, திமுகவினர் வேட்பாளராக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தாலும் ஒவ்வொரு  வார்டிலும் இரண்டு கட்சிகளுக்கும்  இரண்டு அணிகள்  இருந்து வருகின்றனர்.  அதிமுகவில் செல்லப்பாண்டியன் அணியும், சண்முகநாதன்  அணியும், திமுகவில் கீதாஜீவன்  அணி, அனிதா அணி சில பகுதிகளில் ஜோயல் அணி உள்ளனர்.  இதை சமாளிப்பது எப்படி என்று இதுவரை இரண்டு தலைமையில் சிந்திக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும்.  வெற்றி, தோல்வியை அதிகாரிகள் மூலம் நிர்ணயம் செய்து விடலாம் என ஆளும் தரப்பு கருதுகிறது. அதை எதிர்கொள்ள திமுகவினர் தயக்கம் காட்டுவதாக  கூறப்படுகிறது.  இதற்கு முற்றுப்புள்ளி  வைக்கப்படும் என்று இரண்டு தரப்பிலும் எதிர்பார்க்கின்றனர்.  தென்மாவட்டத்தில் அதிமுகவில் நாடார்  சமுதாயத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தலைமையின்  மீது எழுந்துள்ளது.  அதுவும் குறிப்பாக சிறுபாண்மை சமுதாயத்தை  சார்ந்த  நாடார் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது  பலருக்கும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.  உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமை செல்லப்பாண்டியலுக்கும், சண்முகநாதனுக்கும் ஒரே சம அளவில் முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற்றம்  கிடைக்கும்.  இல்லையேல் கனிமொழி எம்.பி முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்றினாள் உள்ளாட்சியில் அவர்களது நல்லாட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் அமையும் வகையில் இருக்கும் என்று எல்லோரும்  கூறுகின்றனர்.
தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பொதுவார்டாக அறிவிக்கப்பட்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் பல பகுதிகளில் பெண்கள் போட்டியிடுவதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்ட ,போட்டியிட ஆர்வம் காட்டிய செய்தித்துறையை சார்ந்த குடும்பத்தின் பெண்கள் சுயேட்சையாக களம் இறங்க உள்ளதாக தெரிகிறது.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo