Onetamil News Logo

அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் பி.ஏ. ஆறுமுகநயினார் வழங்கினார்.

Onetamil News
 

அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் பி.ஏ. ஆறுமுகநயினார் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;தூத்துக்குடி அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் பி.ஏ. ஆறுமுகநயினார் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் ஆலோசனையின் பேரில் வீட்டினுள் வசிக்கும் மக்களுக்கு(curfew) கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள குடும்பத்திற்கு 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையில்லா சோப், டெட்டால் சனிடேஷர், 10ஆயிரம் நபருக்கு விலையில்லா ஃபேஸ் மாஸ்க், போன்றவை அண்ணா நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு,வீடாக சென்று முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி.ஏ.ஆறுமுக நயினார்  தலைமையில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் செய்திருந்தார். உடன் தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ்டி.கருணாநிதி, வட்டக் கழக பிரதிநிதி வீரக்கோன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் சகாயராஜா டிரைவர் முருகன், சேர்மதுரை  இருந்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் எங்களுக்கு வீடு தேடி வந்து எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களான பேஸ் மாஸ்க், சானிட்டரி ஹேண்ட் வாஷ், டெட்டால் போன்றவைகளை தனது சொந்த செலவில் வழங்கிய முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் அவர்களையும் இதனை அதிமுகவினர் வாயிலாக மக்கள் பணி செய்திட ஆணையிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களையும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து மனதார பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo