Onetamil News Logo

தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் சந்தீப் நந்தூரி, பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஜனவரி  24 ; தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா இன்று (24.01.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு 373 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7.43 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது: தமிழக அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தில் மாற்றுத்திறனுடையோருக்கென உள்ளடக்கிய கல்வித்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3857 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் ஆண்டுதோறும் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனுடையோர் கண்டறியப்பட்டு விடுபடாமல் அருகிலுள்ள பள்ளிகளில் சிறப்பு கல்வியாளர்கள் மூலம் சேர்க்கப்படுகின்றனர். பள்ளிகளில் சேர்க்க இயலாத நிலையில் ஒன்றியங்கள் தோறும் உள்ள ஆதார வளமையங்களில் சேர்க்கப்பட்டு தேவையான சிறப்பு பயிற்சிகள் அளித்த பின்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். மிகவும் தீவிர பாதிப்புடைய குழந்தைகளுக்கு வீடுகளுக்கு சென்று பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
தமிழக அரசானது மாற்றுத்திறனுடையோருக்கு பல்வேறு சலுகைகள் அளித்து தொடர்ந்து மிகவும் கரிசனத்தோடு கவனித்து வருகிறது. இவ்வாண்டு முதல் இக்குழந்தைகள் பள்ளிக்கு வர இடர்பாடுகளாக உள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை நீக்கும் பொருட்டு மாதந்தோறும் ரூ.545 உதவி தொகையாக வழங்கி வருகிறது.  மேலும் பெண் குழந்தைகள் எனில் ரூ.200 கூடுதலாக வழங்கி வருகிறது. வீட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பலதரப்பட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் கண்டறியப்படும் மாற்றுத்திறனுடையோருக்கு ஒன்றியங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை, உதவி உபகரணங்கள், உதவி தொகை, நலத்திட்டங்கள் பெற தகுதியுடையோர் கண்டறியப்படுகின்றனர். 
இந்த ஆண்டில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் சுமார் 2113 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 9 நபர்கள் அறுவை சிகிச்சைக்கும், 108 நபர்கள் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டனர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மூன்று சக்கர வண்டி, 18 சக்கர நாற்காலி, 9 தள்ளுவண்டி, 15 மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, 40 காதொலி கருவி, 240 காதொலி கருவி பாட்டரி, 6 Elbow Crutch Adjustable> 26 Cliper,  16 பன்முக புலன் தொகுப்பு கல்வி வளர்ச்சி பெட்டகம் என ரூ.7,43,486/- மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo