Onetamil News Logo

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2020  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  

Onetamil News
 

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2020  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  



தூத்துக்குடி 2020 நவம்பர் 22 ;தூத்துக்குடி மாவட்டம் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும்  சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2020  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும்  சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2020  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. 16ம் தேதியில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை 30 நாட்கள் வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தல், நீக்கல் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் அலுவலர்கள் இருப்பார்கள் அவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம் அல்லது  வட்டாட்சியர் அலுவலங்களில் பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் சேர்த்தலோ, திருத்தலோ அல்லது நீக்கலோ  செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறு இருக்கிறது. அது நேற்றும் நடந்தது. இன்றும் நடைபெறுகிறது. 
இதுமாதிரி டிசம்பர் மாதமும் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் காலை முதல் மாலை வரை பூத் அலுவலர்கள் விண்ணப்பங்களை வழங்குவார்கள். இந்த விண்ணப்பங்களில் பெயர் சேர்ப்பதற்கு தனி படிவம், நீக்குவதற்கு தனி படிவம், முகவரி மாற்றுவதற்கு தனி படிவங்கள் இருக்கிறது. இந்த தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார்கள் என்றால் அதற்கு தனி படிவம் இருக்கிறது. ஒவ்வொரு படிவத்தையும் நிரப்புவதற்கு அலுவலர்கள் உதவி செய்வார்கள். வாக்கு அளிப்பது ஒவ்வொருத்தரின் ஜனநாயக கடமை உரிமை. அதை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டுமானால் நாம் வாக்காளராக கண்டிப்பாக இணைந்து கொள்ள வேண்டும். இனிமேல் நமது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதையும் நாம் இப்பவே மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பிரச்சனை இல்லாமல் வாக்களிக்க முடியும். அதனால் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் கண்டிப்பாக வாக்காளராக இணைத்து கொள்ள வேண்டும். 01.01.2021 அன்று யாரெல்லாம் 18 வயது பூர்த்தி அடைதார்களோ அவங்கெல்லாம் கண்டிப்பாக வாக்காளராக இணைந்து கொள்ள வேண்டும். வரும் டிசம்பர் மாதம் 18 வயது வந்தவர்களும் தங்களை வாக்காளராக இணைத்துக்கொள்ளலாம்.  அதே மாதிரி சிறப்பு முகாமில் சனி, ஞாயிறு வெளியே சென்றிருக்கிறார்கள் சிறப்பு முகாமில் வாங்க முடியவில்லை என்றால் அவர்களும் பதற்றம் கொள்ள வேண்டாம். 
அவர்கள் வாக்குசாவடி மையம் இருக்கும் இடங்களிலேயே இருக்கும் அலுவலர்கள் படிவங்களை வழங்குவார்கள். அவர்களிடம் வாங்க முடியாவிட்டாலும் கூட வட்டாட்சியர் அலுவலங்களில் கூட அந்த படிவங்கள் இருக்கிறது. அங்கே படிவம் வாங்கி புகைப்படம் ஒட்டி கொடுத்தால் ஜனவரி மாதம் 20;ம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும் என்று தெரிவித்தார். 
அப்படியும் வாங்க முடியவில்லை என்றால் இ சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் செய்யலாம். அல்லது வீட்டில் இருந்து  www.nvsp.in என்ற இணையதளத்தில் வழியாக ஆன்லைன் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தங்களை செய்ய முடியும்.  இந்த சிறப்பு முகாம் மற்றும் திருத்தத்திற்கு உட்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2020  சிறப்பு முகாமில் தங்களை கண்டிப்பாக வாக்காளர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பெயர் பட்டியயில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதையும் திருத்தி கொள்ள வேண்டும். தற்போது முகவரி மாறினால், வேறு தொகுதிக்கு மாறினால் அல்லது புலம் பெயர்ந்தால்; அவர்களும் கண்டிப்பாக திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி,  துணை வட்டாட்சியர் (தேர்தல்) செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo