Onetamil News Logo

தூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்   

Onetamil News
 

தூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி வேண்டுகோள்   


  தூத்துக்குடி 2019 நவம்பர் 14 ;தமிழக அரசு மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் ஆணைப்படி தமிழக பள்ளி,மாணவ மாணவியருக்கு சுகாதரத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.அம்மாணவர்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களில் ,ஓய்வு நேரங்களில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.இதன்படி ஆரோக்கியபுரத்தில் உள்ள விவிடி மேல்நிலையப்பள்ளியில் தேர்தெடுக்கப்பட்ட 52மாணவர்களுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.அதில் கலந்துகொண்ட தூத்துக்குடி சுகாதார துறை துணை இயக்குனர்,மருத்துவர் கீதாராணி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வாழ்த்து கூறினார்.பின்னர் அவர் வீடு தேடி வரும் டெங்கு பணியாளர்களுக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.என்றும் அவர்களின் சீரிய பணிகள் தான் கடந்த ஆண்டுகளை விட மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தாக்கம் குறைந்து இருப்பதாக அவர் கூறினார்.மேலும் கூறும் போது சில இடங்களில் பணியாளர்களை பொதுமக்கள் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும் பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும்,புகார்கள் வருகின்றன.இதுகுறித்து நடந்துகொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo