Onetamil News Logo

தூத்துக்குடியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ! 18 மின்மோட்டார்கள் பறிமுதல் !

Onetamil News
 

தூத்துக்குடியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ! 18 மின்மோட்டார்கள் பறிமுதல் !  


  

தூத்துக்குடி 2019 பிப்ரவரி 11 ;தூத்துக்குடியில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ! 18 மின்மோட்டார்கள் பறிமுதல் !  செய்யப்பட்டது.                                                                                                                          இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராகவும் சிரமமின்றியும் பொதுமக்களுக்கு கிடைக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகமானது துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இதன் ஓரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஓரு நாள் விட்டு ஓரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் இதன் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் ஓரு நாள் விட்டு ஓரு நாள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
         இந்நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதால் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிப்படைகிறது.மேலும் குடிநீர் விநியோகத்தின் கடைசி பகுதிகளுக்கு (வுயடை நுனெ) குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் 09.02.19 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீடீர் ஆய்வு மேற்கொண்டதில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பில் முறைகேடாக பொருத்தப்பட்ட 18 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட இதுபோன்ற தீடீர் ஆய்வுகள் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் தொடரும் என அவர் தெரிவித்தார்.

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo