Onetamil News Logo

தூத்துக்குடி கூடைப்பந்து கழகம்  நடத்திய 8வது மாநில அளவிலான 13 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முகமது அலி நினைவு சுழற்கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நிறைவு 

Onetamil News
 

தூத்துக்குடி கூடைப்பந்து கழகம்  நடத்திய 8வது மாநில அளவிலான 13 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முகமது அலி நினைவு சுழற்கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நிறைவு 


தூத்துக்குடி 2018 ஜனவரி 8 ;தூத்துக்குடி கூடைப்பந்து கழகம்  நடத்திய எட்டாவது மாநில (மாணவியர்கள்) மற்றும் மாவட்ட (மாணவர்கள்) அளவிலான 13 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முகமது அலி நினைவு சுழற்கோப்பை கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள ராமகிருஷ்ணன்  நினைவு மின்னொளி மைதானத்தில் வைத்து ஜனவரி 4 முதல் 7-ம் தேதி வரை காலையும் மாலையும் நடைபெற்றது.
கூடைப்பந்து போட்டியின் முதல் நாளான 04.01.2019 அன்று தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரெனியஸ் ஜேசுபதம்   கலந்து கொண்டு கூடைப்பந்து போட்டியினை தொடங்கி வைத்தார்.
                                                                                                                                                      இறுதி போட்டியில் 13 மற்றும் 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை விகாசா பள்ளியும்,இரண்டாம் இடத்தை கிரசண்ட் பள்ளியும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியும், இரண்டாம் இடத்தை சேலம் செயிண்ட் ஜோசப் பள்ளியும், 16 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியும், இரண்டாம் இடத்தை பட்டி; வீரன்பட்டி என்.எஸ்.வி.வி.பள்ளியும் வெற்றி பெற்றது.
                                                                                                                                              வெற்றி பெற்ற கூடைப்பந்து அணிகளுக்கு தூத்துக்குடி கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்தின் சர்வதேச வீரருமான பிரதிப் ஜான் ,  சில்வியா ஜான் ஆகியோர்  இணைந்து; பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளையும் மற்றும் சிறப்பாக விளையாடிய மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo