Onetamil News Logo

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி.கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். 

Onetamil News
 

ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி.கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். 


 தூத்துக்குடி  2020 பிப்ரவரி 24  ; ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
 தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் சாலை பாதுகாப்பு குழுவும், தூத்துக்குடி மாநகர போக்குவரத்துக் காவல் பிரிவும் இணைந்து சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். தூத்துக்குடி ரூரல் துணை காவல் கண்காணிப்பாளர் பா.கலைக்கதிரவன் பேரணியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை சென்று பேரணி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து கணிதத்துறைத் தலைவர் (முதல்வர் பொறுப்பு) முனைவர் கி.பழநி அவர்கள் தலைமையில் கல்லூரிக் கலையரங்கில் பா.கலைகதிரவன் மாணவிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும்இ சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வினை உடற்கல்வி இயக்குநர் ரா.அனிஷ்டா ஏற்பாடு செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo