Onetamil News Logo

பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் ;தூத்துக்குடியில் பரபரப்பு

Onetamil News
 

பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் ;தூத்துக்குடியில் பரபரப்பு 


தூத்துக்குடி 2020 ஜூன் 2 ;தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் மெயின் சாலை பதட்டத்துக்குள்ளானது.
தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலமாக கடன் பெற்று  வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கடந்த 3 மாதமாக பெனால்டி தொகையை வீடு தேடி மிரட்டி  வசூலித்து வந்துள்ளது.  ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவிப்பு செய்துள்ள  இந்த நெறுக்கடியான காலகட்டத்தில்  வாடிக்கையாளர்கள் தனது தவணை தொகையை  செலுத்த இயலாமல் இருந்துள்ளனர். ஆனால் அரசு உத்தரவையும் மீறி இந்நிறுவனம் அனைவருக்கும்  பெனால்டி விதித்து அதையையும் கட்டாய வசூல் செய்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு 920 ரூபாயையும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயையும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்ததாக தெரிய வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள்  அந்த நிதி நிறுவனத்தை நாடி நடந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்க முயன்றுள்ளனர். பஜாஜ் பைனான்ஸ் நிர்வாக ஊழியர்களோ எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று மலுப்பலான பேசியதுடன், மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசி வாடிக்கையாளர்களை தாக்க வந்துள்ளனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் இது சம்மந்தமாக பேசிக் கொள்ள  உங்களுக்கான மேல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு யாரும் எங்களுக்கு முதலாளி கிடையாது, எங்களை பற்றி புகார் தெரிவிக்க முடியாது என்றும், இதற்கென்று மேல் அதிகாரிகள் யாரும் கிடையாது என்று மிரட்டலான பதிலை சொல்லி, வெளியே போகுமாறு தள்ளி விட்டு அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்தும், ஒருமையில் பேசி, அத்துமீறி நடந்து கொண்ட ஊழியர்களை கைது செய்யக் கோரியும் பஜாஜ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
அதன்பின்னர் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள்  சிறிது நேரத்திற்குப் பின் அலுவலகம் அருகில் உள்ள மெயின் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கினார்கள். இதில் பஜாஜ் நிறுவனம் ஒரு போர்ஜரி நிறுவனம்,  லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வருகிறது என்றும் , தலைமை இல்லாத கந்து வட்டி கும்பல் என்றும் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  உடனடியாக  நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். போலீசாரின் சமரச பேச்சுக்கு கட்டுப்பட்டு வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இதன் பின் நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் போலீசாரால்  வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பையும் , பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பொதுமக்களின் புகாருக்கு ஆளாகி வரும் பஜாஜ் பைனான்ஸ் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo