Onetamil News Logo

தூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. முரளி ரம்பா, தலைமையில் ஆலோசனை கூட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி S.P. முரளி ரம்பா, தலைமையில் ஆலோசனை கூட்டம் 


தூத்துக்குடி 2019 மே 20 ;தூத்துக்குடி  மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரில் வருகிற 22.05.2019 (நாளை மறுநாள்) முழு அமைதி நிலவிட இன்று (20.05.2019) மதியம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பேசுகையில் கடந்த 24.05.2018 அன்று நான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றேன். அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித சிறிய பிரச்சனை கூட வரவில்லை.
இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த தூத்துக்குடி பொது மக்களாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போன்று வருகிற 22.05.2019 அன்றும் எவ்வித சிறிய பிரச்சனைகள் கூட வராமல் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் காவல்துறை சட்டத்திற்குட்பட்டு உங்களுக்கு எந்த உதவியும், எந்த நேரத்திலும் செய்யத்தயாராக இருப்பதாகவும் கூறினார்.  
இந்த ஆலோசனைசக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரன்ஜித் சிங்  அவர்களும் கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகர மக்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம் என்றும், பொது மக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ்  முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேத ரத்தினம் மற்றும் பொன்ராமு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
 தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர்  பார்த்திபன், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம்  சிவ செந்தில்குமார், தெர்மல் நகர் ரஞ்சித் குமார், தென்பாகம் ஜீன்குமார்  உட்பட பல காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo