Onetamil News Logo

வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்; காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 

Onetamil News
 

வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்; காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 


                                                                                                                                              

தூத்துக்குடி 2018 டிசம்பர் 7;தூத்துக்குடி அருகே வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்; காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...வேப்பலோடை, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள    அலுவலக உதவியாளர் பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில் SCA(W)(DW) நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பள ஏற்ற முறை 15700 – 50000,வயதுவரம்பானது 01.07.2018 அன்று SCA(W)(DW)  18  முதல் 35 வயது வரையும், இருக்கவேண்டும்.  கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேறியிருக்கவேண்டும் மற்றும் தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகீழ்காணும் விவரங்கள் அடங்கியவிண்ணப்பத்தில ;உரியநகல்களுடன் பூர்த்தி செய்யப்படவேண்டும். விண்ணப்பதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி மற்றும் கைபேசிஎண். ஆகிய விவரங்களுடன் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாள்: 19.12.2018. மாலை 5.00 மணிவரை. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வேப்பலோடை, தூத்துக்குடி– 628 903 தொலைபேசிஎண். 0461-2267300 தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகதேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்
குறிப்பு: முன்னுரிமை இடத்தில் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாதபோது, முன்னுரிமை அல்லாதோர் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
SCA(W)(DWஇல்லாத நேர்வில் SCA(W)-P, SCA(W)- NP, SCA(GL)-P, SCA(GL)- NP  என்ற வரிசையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்பதால், இத்தகைய விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo