Onetamil News Logo

தூத்துக்குடி நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கி விசித்திரமான உத்தரவு    

Onetamil News
 

தூத்துக்குடி நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு நீதிபதி முன் ஜாமீன் வழங்கி விசித்திரமான உத்தரவு    


தூத்துக்குடி 2019 நவம்பர் 6 ;தூத்துக்குடி மட்டக்கடை சேது ராஜா தெருவை சார்ந்தவர் கணேசன் மகன் ஹரிஹரன் .இவர் கடந்த 17.10.2019 அன்று அரசு தொழில் நுட்ப கல்லூரியில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை அவதூறாக பேசி அடித்ததாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அதிசய குமார் மூலம் மனு தாக்கல் செய்தார்.மேற்படி மனுவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் மனுதாரர் ஹரிஹரன் தினமும் காலை 10 மணிக்கு அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் மூன்று மரக்கன்றுகளை 10 நாட்கள் நட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று 6.11.2019 ல் அரசு தொழில் பயிற்சி மையத்தில் மனுதாரர் ஹரிஹரன் மரக்கன்றுகளை நட்டார். அவர் மரம் நடும் போது கல்லூரி உதவி இயக்குனர் பழனி, உடற்பயிற்சி ஆசிரியர் நேவிஸ், பயிற்சி அதிகாரி வள்ளி மற்றும் மனுதாரரின் வழக்கறிஞர் அதிசய குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மனுதாரர் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மரம் நமக்கு நண்பன் என்ற வாசகம் அடங்கிய பதாகையினை தாங்கியபடி மரம் நட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூமணி ஆஜரானார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo