Onetamil News Logo

திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு வணிகர் சங்க பேரமைப்பினரிடம் ஆதரவு..!   

Onetamil News
 

திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு வணிகர் சங்க பேரமைப்பினரிடம் ஆதரவு..!       


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 14;  திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினரிடம் ஆதரவு கேட்க்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 18ம்தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் காலியாவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கனிமொழி கருணாநிதியும், விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வசந்தம் ஜெயக்குமாரும் களம் இறங்கியுள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் கனிமொழிகருணாநிதி, வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் மாவட்ட பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
திமுகவின் வெற்றிக்கு வலுசேர்க்கும் வகையில் தலைமையின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்.எல்.ஏ.,(வடக்கு), அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,(தெற்கு) தலைமையில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தொகுதி முழுவதும் நாள்தோறும் இளைஞர் அணியினருடன் சுற்றி வந்து முக்கிய பிரமுகர்கள், விவசாய பிரமுகர்கள், வணிகர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், மதவழிபாட்டு தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் நேற்று கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா, தூத்துக்குடி மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவு கேட்டார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியபோக்கால் வணிகர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 
மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் மிகப்பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன், சிறுதொழில்கள் அனைத்தும் நசுங்கி விட்டன. பல்வேறு பிரச்சனைகளால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள வணிகர்களை பாதுகாத்திட நாங்கள் கோரிக்கை விடுத்தும் இந்த அரசுகள் எங்களை கண்டுகொள்ளவே இல்லை.
தற்போதுள்ள சூழ்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள் அனைவரும், நாம் யாரால் பாதிக்கப்பட்டுள்ளோம், பாதிப்புகளில் இருந்து விடுபட யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் நாங்கள் தேர்தலில் அளிக்கும் வாக்குகள் மாற்றத்தை உருவாக்கும்.
பொதுவாக வாக்களிக்கும் 6பேரில் ஒருவர் வியாபாரியாகவும், வாக்களிக்கும் 6குடும்பங்களில் ஒரு குடும்பம் வியாபாரி குடும்பமாகவும் இருக்கிறது. இதனைப்பார்க்கும் போது வியாபாரிகளின் வாக்குகள் இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வரும் மே 5ம் தேதி சென்னையில் 36வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.
தற்போது எங்களை சந்தித்து திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல், தங்களது வேட்பாளர்கள் கனிமொழிகருணாநிதி, வசந்தம் ஜெயக்குமாருக்கு ஆதரவு கேட்டுள்ள நிலையில், நாங்கள் எங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளோம் என்றார்.
இதில், தூத்துக்குடி மாநகர முன்னாள் பகுதி செயலாளர்கள் பி.எஸ்.கே.மாரியப்பன், பென்னி, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் தனபால், சிலுவைப்பட்டி பால்துரை, வசந்த், விமல்ஜி, தளபதிமுருகன், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் வைகுண்டராஜன், மாவட்ட தலைவர்கள் சோலையப்பராஜா, காமராசு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், தொகுதி செயலாளர் சேதுரத்தினம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் எட்டயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் ராஜா, துணைத்தலைவர் வெங்கடேஸ்வர ராஜா, பொருளாளர் பரமசிவம், நிர்வாக குழு உறுப்பினர் சுப்பையா ஆகியோரை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவு கோரினார்.                   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo