Onetamil News Logo

கந்துவட்டி கொடுமை ; ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி,நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

Onetamil News
 

கந்துவட்டி கொடுமை ; ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி,நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்  கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;கந்துவட்டியால் கந்துவட்டி பணத்தை பெருக்கும் வியாபாரிகள் ,வசதியாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களை வருமானவரித்துறையும் கண்டுகொள்வதில்லை,போலீசாரும் கண்டுகொள்வதில்லை,இந்த நிலையில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, மீது பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.இவருக்கு பணம் வழங்கினால் தான் நடவடிக்கை எடுப்பார்.இவர் திருநெல்வேலியில் லஞ்சப்பணத்தில் மிகப்பெரிய  வீடு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும்,என்பது தான் உண்மை.... 
 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையம் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி கணேசன். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சம் கணேசன் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் வட்டி கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால் அதற்கு பிறகும் வீட்டு பத்திரத்தை கொடுக்காமல், வட்டி பணம் கேட்டு ஜோசப் மிரட்டி வருவதாக ஏரல் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக ஏரல் காவல் நிலையத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த  கணேசன் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேருடன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து  மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதனை கண்டு அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் விரைந்து வந்து அவர்களை தடுத்து காப்பாற்றினர். பின்னர் 2 கைக்குழந்தைகள் உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கணேசன் ஏரல் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த கணேசன், அவருடைய மனைவி வேளாங்கண்ணி, மகள் வெட்காளியம்மாள், நட்டார், மகன் செந்தில்குமார் மற்றும் வெட்காளியம்மாளின் 2 கைக்குழந்தைகள் ஆகிய 7 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென கையில் வைத்து இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கொடுமையால் இரண்டு கைக்குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.     
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo