Onetamil News Logo

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் தலைமையில் தூத்துக்குடி  மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். 

Onetamil News
 

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் தலைமையில் தூத்துக்குடி  மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். 


தூத்துக்குடி  2019 ஜூலை 8 ;தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கம் சார்பில்  கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை  மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் சந்திப் நந்தூரி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் 
சார்பில்  கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர் அதில் கூறியதாவது... 
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர்களின் பதவியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டு சங்கச் செயலாளர்களை பணியிடம் மாற்றம் செய்ய கூட்டுறவுத் துறையால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 பொது பணிநிலைத்திறனுக்கான ஒழுங்கு முறை விதிகளில் உள்ள குறைபாடுகளை களைந்து, பணியாளர்களுக்கு ஏற்படும் பாதகங்களையும், சங்கத்திற்கு ஏற்படும் இழப்புகளையும் நிவர்த்தி செய்யும் வகையில்  தமிழக முதல்வர்  தக்க உத்திரவு பிறப்பிக்க வேண்டுமாறும், அதுகாரும் பார்வை 1 மற்றும் 2-ல் காணும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி தருமாறு அதில் கூறியுள்ளனர்.
 கோரிக்கைகள்
1. கூட்டுறவு வங்கி / சங்கங்களின் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புதிய ஊதியம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அனைத்து நிலை கூட்டுறவுச் சங்கப்பணியாளர்களும் புதிய ஊதியம் பெற்று பயனடைந்த நிலையில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களான விற்பனையாளர்கள் / கட்டுநர்களுக்கு புதிய ஊதியம் அறிவிக்கப்படாமல்  உள்ளது. எனவே, சமவேளைக்கு சம ஊதியம்  என்ற அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை கூட்டுறவு சங்கங்களின் பணிபுரிந்து வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் காலதாமதமின்றி வழங்கிட வும்.
2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம்  / நகரக் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள், நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் உள்ள ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட  
3. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியிடம் பார்வை 1-ல் காணும் அரசு ஆணையின்படி பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  சங்கச் செயலாளர்கள் பணியிடம் மாற்றம் தொடர்பான நடைமுறைகள் பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக,· தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பணிநிலைக்கு கீழ் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாமல் பணிபுரிந்து வருபவர்கள் இந்த பொதுப்பணிநிலைத்திறன் காரணமாக பதவி உயர்வு வாய்ப்புகளை முற்றிலும் இழக்க நேரிடும்.
· வணிக வங்கியின் தாக்கத்தினாலும் செயலாளர் பணியிட மாற்றத்தாலும் ஏற்படும் தொய்வு சங்கங்களை மேலும் நலிவடைய செய்வதோடு பணியாளர்கள் தொடர்ந்து ஊதியம் பெற முடியாத சூழ்நிலை­யுடன் பணியிழப்பை சந்திக்கக் கூடிய பேராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.
· சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களின் சம்பள விகிதம் சங்கத்திற்கு சங்கம் வேறுபாடு உடையதாகவும், கடும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாகவும் இருந்து வருகின்றது. இதற்கு தீர்வு காணாமல் செயலாளர்கள்  பணியிட மாறுதல் செய்யப்பட்டால் பணியாளர்கள் மத்தியில் கடும் விரக்தியையும் தொய்வினையும் ஏற்படுத்தும். 
ஆகையால் சங்கப் பணியாளர்களுக்கு ஒரே சீரான மற்றும் ஏற்றத் தாழ்வு இல்லாத முறையான ஊதியம் அனுமதிக்கப்பட்டு, அப்பணியாளர்களுக்கான ஊதியத்தை அரசு மூலமாக வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தும் வரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது பணிநிலைத்திறன் கீழ் பணிமாறுதல் நடைமுறையை நிறுத்தி வைத்திட மேலே உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து தொழில் அமைதி காத்திட கூறியுள்ளனர்.
 இந்தப்போராட்டத்தில்  மாவட்டத்தலைவர்  கல்யாணராமன்,மாவட்ட பொருளாளர் கணேசன்,கௌரவச்செயலாளர் ஜேசுராஜன்,மாவட்ட துணைத்தலைவர் தம்பிராஜ்,பெனிஸ்கர்,மாவட்ட இணைச்செயலாளர் ஜெயலட்சுமி,உலகநாதன்,ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், கிருஷ்ணன், ஜவகர் ,பகவதி, ராஜேந்திரன், கென்னடி, கோபால், ஆறுமுகம், தங்கபாண்டியன்,  முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகபாண்டியன், ராமசந்திரன்,ஒன்றிய தலைவர்கள் தேவராஜ்,கண்ணுசாமி,நெல்சன் தேவா பிச்சை,சண்முகவேலு,குமரேசன்,வித்தியா,ஜெபசிங்,எட்வின்,மாரியப்பன்,திருமணித் தங்கம், நாகமணி மற்றும்  400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo