Onetamil News Logo

முத்தாலங்குறிச்சியில் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்மாய் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார். 

Onetamil News
 

முத்தாலங்குறிச்சியில் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்மாய் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார். 


முத்தாலங்குறிச்சி 2019 ஜூலை 12 ;தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி முத்தாலங்குறிச்சியில் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்மாய் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம்; கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் முத்தாலங்குறிச்சி ஊராட்சியில் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்மாய் தூர்வாறும் பணிகள் துவக்க நிகழ்ச்சி  இன்று (12.07.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,  முத்தாலங்குறிச்சி கண்மாயினை தூர்வாறும் பணிகளை துவக்கி வைத்தார். முத்தாலங்குறிச்சி கண்மாய் கொள்ளவு 135 ஏக்கர், பாசன மடை 4, வடிகால் மடை 1, ஆயக்கட்டு 197 ஏக்கர் உள்ளது.   
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
நமது மாவட்டத்தில் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் பல்வேறு பகுதியில் உள்ள குளங்களை பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாறும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஊரக பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊரணிகள், குட்டை, சிறுகுளங்கள் தூர்வாரவும் கிராம பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மரம் நடுதல் உள்ளிட்டவைகளும், கழிவுநீர் சுத்திகரித்தல், திடக்கழிவு மேலாண்மை, நெகிழிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பொதுமக்கள் பங்களிப்புடன் செய்யப்படவுள்ளது. 
மேலும், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தினை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்கீழ், உடன்குடி, கயத்தார், ஓட்டப்பிடாரம் இளையரசனேந்தல் ஆகிய பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்தில் 3 குளங்கள் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், கறைகளை பலப்படுத்துதல், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இன்று  திருவைகுண்டம் வட்டம்; கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் முத்தாலங்குறிச்சி குளத்தினை தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. மழைநீர் சேமித்தால் நிலத்தடி நீர் அதிகரிக்க செய்யும் என்பதையும், மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  செய்துங்கநல்லூர் சென்ட் மேரீஸ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களது கிராம பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன். , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், திருவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் வினோத்குமார், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo