Onetamil News Logo

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் காலதாமதமின்றி நிவாரணதொகை வழங்கிட கீதாஜீவன் எம்.எல்.ஏ கோரிக்கை 

Onetamil News
 

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் காலதாமதமின்றி நிவாரணதொகை வழங்கிட கீதாஜீவன் எம்.எல்.ஏ கோரிக்கை 


தூத்துக்குடி 2020 மே 23 ;அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் காலதாமதமின்றி நிவாரணதொகை வழங்கிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்  பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன.  இதனால் தொழிலாள தோழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் தமிழக அரசு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும்  2000 ரூபாய் இரு தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் இதுநாள் வரை தொழிலாளர் நலவாரியத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுமையாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் பதிவு செய்திருந்த போதும் சில ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வங்கி கணக்கில் மட்டுமேபணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.  தினசரி 100 பேர்; 150பேர் என்ற அளவிலேயே பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.  இதனால்  தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
அதே போல தொழிலாளர் நலவாரியத்தில் மார்ச் - 2020  வரை புதிப்பித்தவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படும் என்று சொல்வதாக தெரிகிறது.  இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகினறனர்.  இந்த நிபந்தனையையும் தளர்த்தி தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணதொகை வழங்கிட ஏற்பாடு செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்டஆட்சிதலைவர் அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo