Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 105 அதிக திறன் கொண்ட விசைப் பம்புகள் வைத்து தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 105 அதிக திறன் கொண்ட விசைப் பம்புகள் வைத்து தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


தூத்துக்குடி 2019 டிசம்பர் 4 ;தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் 105 அதிக திறன் கொண்ட விசைப் பம்புகள் வைத்து தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நநிலத்தடி நீர் தரையை ஒட்டி இருப்பதால் ஊற்று வந்து கொண்டிருப்பதாலும் நீரை உடனடியாக அகற்றுவது சற்று சவாலாக இருக்கிறது. இருந்தாலும் வெளி ஊர்களில் இருந்து நீர் உறிஞ்சும் லாரிகள் 15 கொண்டுவந்து அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு வருகிறது. இரவு பகலாக மொத்தம் 450 மாநகராட்சி பணியாளர்கள் நீர் அகற்றும் பணியில் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மேலும் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு பிளீச்சிங் பவுடர் கொசு ஒழிப்பு மருந்துகள் கொசு ஒழிப்பு புகை வாகனங்கள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பு குழுக்கள் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு சிறப்பு சுகாதார மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்று நோய் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo