Onetamil News Logo

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து சீர்கேட்டால் 5 ஆண்டுகளாக சுகாதார வளாகம் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம்! மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் பொதுமக்கள்? 

Onetamil News
 

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து சீர்கேட்டால் 5 ஆண்டுகளாக சுகாதார வளாகம் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம்! மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் பொதுமக்கள்? 


தூத்துக்குடி  2020 ஆகஸ்ட் 5 ; தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்மடம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் கடந்த 2013-2014ம் ஆண்டில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. 
சுமார் 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த ஆண்கள் சுகாதார வளாகம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாமல், 24 மணி நேரமும் பூட்டப்பட்ட நிலையில், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்து வருகிறது.; இந்த சுகாதார வளாகத்தினால், அப்பகுதி பொதுமக்களுக்கு எவ்வித பயனுமில்லை என இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். அரசு நிதியில் பல லட்ச ரூபாய் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் யாருக்கும் பயனிற்றி இருப்பது மற்றும் இந்த திட்டத்திற்காக அரசு பணம் பல லட்சம் வீணடிக்கப்பட்டது தான் மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த பகுதி இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். 
அதே பகுதியில் அமைந்துள்ள சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர்நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் 2016-17 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் திட்டம் மூலம் சுமார் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மரக்கன்றுகளை  ஆடு,  மாடுகளிடம் இருந்து பாதுகாக்க இதனை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது  2 திணங்களுக்கு முன்பு அவசர அவசரமாக கம்பி வேலி ஒரு பகுதி அகற்றப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மரக்கன்றுகள்  
உற்பத்தி செய்தல் பணிக்கு இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கம்  அப்பகுதியில் உள்ள ஆண்கள், இளைஞர்கள் அவசர தேவைக்கு கூட கழிப்பிட வசதி இல்லாமல் இருந்து வருகிறது. 
அதுபோல், அப்பகுதியில் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் செயல்படாமல் இருந்து வருவது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், இதுகுறித்து சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வளாகத்திற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதால், ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் இடம் ஆகிய இரண்டும் அமைந்துள்ள பகுதியினை சுற்றி பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பி வேலியை அகற்றி விட்டு அரசு புறம்போக்கு இடத்திற்கு பாதை அமைக்கும் பணிக்காக சிலர் முன்னோட்டமாக பணிகளில் ஈடுபடுவதாக அந்த பகுதியில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
ஆகையால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரும்  உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்தாயத்திற்குட்பட்ட காமராஜர்நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன் பாட்டுக்காக   இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பல ஆண்டுகளாக  அப்பகுதியை சுற்றி கம்பி வேலிகள் இருந்து வந்த நிலையில் திடீரென  அகற்ற எடுத்து வரும் நடவடிக்கையை கண்காணித்து  பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தூத்துக்குடி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்தில் நடக்கும் இந்த  சீர்கேட்டிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo