Onetamil News Logo

குலையன்கரிசல் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 57 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Onetamil News
 

குலையன்கரிசல் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 57 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.



தூத்துக்குடி 2018 2018 ஜன 9 ;தூத்துக்குடி மாவட்டம்; குலையன்கரிசல் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 57 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
     தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில்; வுனுவுயு அபிஷேக நாதர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (09.01.2019) நடைபெற்றது. இம்முகாமில் வருவாய் துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.84,000/-, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.4,35,000/-, மகளிர் திட்டம் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.1,90,000/-, வேளாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.5,900/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,  முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் , புத்தாண்டு - பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்துக்கடிதத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 32 ஆயிரத்து 150 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அனுப்பி வைத்தார்கள். இதனை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது:-
தமிழக அரசு அலுவலர்களை மக்கள் இருப்பிடத்திற்கு சென்று ஒவ்வொரு மாதமும் கிராமங்களில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் மூலமும் நடத்திட அறிவுரை வழங்கபட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில், மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல் ஊராட்சியில்; சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. முகாமில் 57 பயனாளிகளுக்கு ரூ.7.15 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், முதற்கட்ட மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட 56 மனுக்களில் 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எஞ்சிய 31 மனுக்கள்; மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  
மேலும் மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், நலத்திட்ட உதவிகள் எவ்வாறு பெற வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்து கூறியுள்ளனர். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக படித்த ஏழை பெண்களுக்கு சமூக நலத்துறை மூலம் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருமண நிதியுதவி ரூ.50,000/- மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.25,000/- மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் ரூ.18,000/-, மகளிர் திட்டம் மூலம் உழைக்கும் மகளிருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம், மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.37,500/-, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய துறைகள் மூலம் தையல் இயந்திரங்கள், தேய்ப்பு பெட்டி, படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்க மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவிகள், மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கிடும் வகையில் வருவாய் துறையின் மூலம் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் இ சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது.  அரசின் திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும், கண்காணிக்கவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் கடைகளுக்கு அல்லது வெளியே சென்று பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
மேலும், குலையன்கரிசல் ஊராட்சி, திரவியபுரம் குக்கிராமத்தில் 14வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.5.75 இலட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல் பணிகளும், குலையன்கரிசல் ஊராட்சி, கிழக்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் அருகில் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.13 இலட்சம் மதிப்பில் 1 இலட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சீரமைத்தல் பணிகளும், போடம்மாள்புரத்தில் குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியம் பொது நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் அமைத்தல் பணிகளும், சந்தணமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ரூ.5.16 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் கற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.17.04 இலட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது என பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,, முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார்.
இம்முகாமில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கரநாராயணன், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, இணை இயக்குனர் வேளாண்மைத்துறை மகாதேவன், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் திட்ட அலுவலர் முத்து லெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தமிழ்செல்வி, தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாம சுந்தரி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo