Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு   - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆய்வு

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு   - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆய்வு


தூத்துக்குடி 2020 ஏப்ரல் 1 ; தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு அமைந்துள்ள ராமசாமிபுரம் பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானோ வைரஸ் நோய் தடுப்பு பணிகள், மருத்துவ பரிசோதனை மற்றும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு அமைந்துள்ள ராமசாமிபுரம், புதுக்கிராமம் சாலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானோ வைரஸ் நோய் தடுப்பு பணிகள், மருத்துவ பரிசோதனை மற்றும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,இன்று (01.04.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி மாநகராட்சி மூலம் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாநகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை மூலம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நபர்கள் உள்ளார்களா என்பதையும், முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி மூலம் கொரானா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ள நபர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் 241 பணியாளர்கள் வீடுதோறும் சென்று சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க 60 கண்காணிப்பாளர்களும், 12 மருத்துவர்களும் கண்காணிப்பார்கள். தினம்தோறும் குறைந்தபட்சமாக 50 வீடுகளில் தினசரி உடற்பரிசோதனைகளை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 
ஆய்வின்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் மற்றும் மருத்துவர்கள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo