Onetamil News Logo

நான் என் குடும்பத்துக்கு காவல்காரன் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு காவல்காரன். மோடி இந்த தேசத்துக்கே காவல்காரன். என்று தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ச.ம.க தலைவர் சரத்குமார் கூறினார்.

Onetamil News
 

நான் என் குடும்பத்துக்கு காவல்காரன் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு காவல்காரன். மோடி இந்த தேசத்துக்கே காவல்காரன். என்று தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ச.ம.க தலைவர் சரத்குமார் கூறினார்.



தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ; அ.தி.மு.க கூட்டணி என்பது பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள் கொண்ட கூட்டணி என்றாலும் ஒற்றுமையான கூட்டணி. என்று தூத்துக்குடியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ச.ம.க தலைவர் சரத்குமார் கூறினார்.
உங்களின் ஆரவாரமான மகிழ்ச்சிகரமான வரவேற்பை பார்க்கும் போது வெற்றி உறுதி என நான் பெருமை கொள்கிறேன். கடந்த 27- தேதி முதல் பல தொகுதிகளுக்கு சென்று வருகிறேன். அத்தனை தொகுதிகளிலும் இப்படித்தான் மக்கள் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குதான் ஓட்டுபோடுவோம் என்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணி என்பது பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள் கொண்ட கூட்டணி என்றாலும் ஒற்றுமையான கூட்டணி. மத்தியிலே வலிமையான நிலையான நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்கிற அடிப்படையில் உருவான கூட்டணிதான். இதுவே அ.தி.மு.கவுக்கு கிடைத்த முதல் வெற்றி.
இந்த கூட்டணி அமைந்ததுமே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்கிறார். முதலில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்கிற சந்தர்ப்பம், சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும் என்கிற சந்தர்ப்பம், பல்வேறு கொள்கைகள் ஒன்றிணைந்து மத்தியிலே மோடி ஆட்சி வரவேண்டும் என்கிற சந்தர்ப்பம், மக்களுக்காக சேவை செய்கிற சந்தர்ப்பம், இந்தியா ஒரு வல்லரசாக வளரவேண்டும், இந்தியர்கள் பெருமையாக வாழவேண்டும் இதெல்லாம்தான் சந்தர்ப்பவாதம்.சுதந்திரம் பெற்றவுடன் அனைத்து சம்ஸ்தாணங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் இந்தியா ஒரு வல்லரசாக விளங்கவேண்டும் என்றார் சர்தார்வல்லபாய்பட்டேல். அதற்கான வேலையில் ஈடுபட்டார். அப்போது ‘காஷ்மீரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நேரு முட்டுக்கட்டை போட்டார். அதன் விளைவு, இன்றுவரை காஷ்மீர் பிரச்னை தீர்த்து வைக்கப்படவில்லை.2004 முதல் 2014 வரை இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மிகுந்திருந்தது. அதற்கு காரணம், பேசா மடந்தையாக இருந்தார் மன்மோகன்சிங். தி.மு.க அவர்களுக்கு தேவையான சுவையான அமைச்சர்களை வாங்கி கொண்டு பணம் சம்பாதித்தார்கள்.
அவர்கள் இன்று பா.ஜ.கவை மதவாத கட்சி என்கிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியில் பங்குவகித்தார்களே அப்போது இது மதவாத கட்சியாக தெரியவில்லையா?.மத்தியில் ஒரு வலிமையான, நிலையான, நேர்மையான ஆட்சி வரவேண்டும் என்றால் மோடி ஆட்சி மீண்டும் வரவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க பத்து ஆண்டுகள் இருந்தார்கள். காஷ்மீர், காவிரி நதிநீர் பிரச்னை தீரவில்லை.
இன்றுவரை அதெல்லாம் இழுபறியில் இருப்பதற்கு காரணம் என்ன கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் தி.மு.க ஆட்சி. அப்போதுதான் பல அனைகள் அங்கே கட்டப்பட்டது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தி.மு.க.,கச்சதீவில் நமது மீனவ மக்கள் மீன்பிடிக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? 1974- 1976 இலங்கை – இலங்கை ஒப்பந்தம் போட்டது இந்திராகாந்தி அம்மையார். பாராளுமன்றத்தில் ஒப்புதல் கூட இல்லாமல் இந்திராகாந்தி அந்த ஒப்பந்தம் போட்டார். நான் யாரைக் கேட்க வேண்டும் என்று ஆணவத்தோடு கேள்வி கேட்டார். அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது தி.மு.க. சர்க்காரியா கமிஷனை எதிர் கொண்டிருந்த தி.மு.க எதிர்ப்பு செய்யாமல் விட்டு விட்டது.
காஷ்மீர் பிரச்னை, காவிரி பிரச்னை, ஈழப்பிரச்னை காங்கிரஸ் – தி.மு. செய்தது என்ன? யாழ்ப்பாணம் செய்து தமிழ்மக்களை பார்த்து அவர்களுக்கு உதவியது பிரதமர் மோடி மட்டும்தான்.
ஹெலிகாப்பர் ஊழல், காற்றாலையில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் ஊழல், நிலக்கரிபேர ஊழல் இப்படி ஊழல் நடந்தது காங்கிரஸ்,திமு.க ஆட்சியில்தான்.மத்திய மாநில ஆட்சியை குறைசொல்லி ஓட்டு கேட்பதற்கு பதிலாக தனிநபர் விமர்சனம் செய்கிறார் ஸ்டாலின். ராகில்காந்தி திட்டத்துக்கு 3லட்சத்தி 60 ஆயிரம் வருகிறது. அவ்வளவு பணத்தை எங்கிருந்து கொடுக்க போகிறார் ராகுல். ஊழல் செய்த பணத்தை இந்த திட்டத்துக்கு கொடுப்பார் என நினைக்கிறேன்.
ஈவிகேஎஸ் இளங்கோவன், மோடி ஒரு காவல்காரன் என்று சொல்கிறார். அதற்கு மோடி அவர்கள், ஆம் நான் காவல்காரன்தான் என்கிறார். நான் என் குடும்பத்துக்கு காவல்காரன் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு காவல்காரன். மோடி இந்த தேசத்துக்கே காவல்காரன்.
எப்படி ஊழல் செய்யலாம். எப்படி ஏமாற்றலாம், எப்படி மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை கொடுக்கலாம் என யோசிப்பவர்கள் தி.மு.கவினரும் காங்கிரஸ்கரர்களும்.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது மோடி. அதுமட்டுமல்ல நமது வீரரை பாகிஸ்தான் பத்திரமாக ஒப்படைத்தற்கு என்ன காரணம். வலிமையான பிரதமர் மோடிதான் காரணம்.
எனவே மத்தியில் வலிமையான அரசு அமையவும் புரட்சித்தலைவியின் கனவு நினைவாகவும் உங்கள் வேட்பாளர் தமிழிசைசெளந்திரராஜனுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டுபோட்டு அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ’’ என்றார்.அவருடன் வேட்பாளர் தமிழிசை மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo