தூத்துக்குடி பல்நோக்கு சமுக சேவை சங்கம் (TMSSS) சார்பில் அன்னை தெரசா ஆதரவுக்கரங்கள் : என்ற திட்டத்தினை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் .மேதகு முனைவர்.ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி 2021 ஜனவரி 13 ; தூத்துக்குடி பல்நோக்கு சமுக சேவை சங்கம் (TMSSS) சார்பில் முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற நோயாளிகளை இல்லத்தில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவம் மற்றும் உளநல உதவிகளைச் செய்யும் “அன்னை தெரசா ஆதரவுக்கரங்கள் : என்ற திட்டத்தினை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் .மேதகு முனைவர்.ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
இவ் விழாவினில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் (RMO),DR.சைலஸ் ஜெயமணி கலந்து கொண்டு நோய்த்தடுப்பு மற்றும் முதியவர்களை பாராமரிக்கும் உறுதிமொழியை முன்மொழிந்தார்கள். புற்றுநோய் பிரிவின் உதவிப்போராசிரியர் DR.இன்சுவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அரசின் இலவச மருந்து முறைகள்; குறித்;தும் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றியும் அதனை சரியான முறையில் ;சிகிச்சை அளிக்கும் முறையினையும் விளக்கிக் கூறினார்கள். இத்திட்டம் ;தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தார்கள்.நெல்லை கேன்சர் கேர் சென்டர் மருத்துவர் DR.சிந்தியா , முதியவர்களின பாராமரிப்பு மற்றும்; நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறினார்கள் (Palliative care).இத்திட்டத்தில் மருத்துவ ஆலோசகர்களான DR.அஐய்,DR.சந்திய வதனா மற்றும் காரிதாஸ் இந்தியா ஒருங்கினைண்பாளர் சகாயராஐ;அவர்களும் கலந்து; கொண்டார்கள். இந்த விழாவில் 43 தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு அவர்கள் தன்னார்வு தொண்டு பணியினை ஏற்றுக்கொண்டார்கள் அவர்களுக்கு TMSSS தன்னார்வ தொண்டர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது
இவ்விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக்குரு பேரருட்திரு.பனனீர்செல்வம், தூத்துக்குடி மறைவட்ட முதன்மைக்குரு பேரருட்திரு. ரோலிங்டன், அருட்தந்தை. ஜேம்ஸ்பீட்டர், அருட்தந்தை.லொயோலாடீரோஸ், அருட்தந்தை. சகாயம், அருட்தந்தை.ஜூலியான்ஸ், அருட்தந்தை.அந்தோணி அமல்ராஐ, அருட்தந்தை.தினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் விழாவினை திட்ட ஒருங்கிணைப்;பாளர் பிரின்ஸஸ் மற்றும் செல்வி. ஜூலியட் ஏற்பாடுசெய்தார்கள்.