Onetamil News Logo

தூத்துக்குடியில் எஸ்.பி.அருண் பாலகோபாலன் தலைமையில் குடியரசு தினவிழா ஒத்திகை 

Onetamil News
 

தூத்துக்குடியில் எஸ்.பி.அருண் பாலகோபாலன் தலைமையில் குடியரசு தினவிழா ஒத்திகை


 

தூத்துக்குடி, 2020 ஜனவரி 25 ;தூத்துக்குடி:குடியரசு தினத்தை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.நாளை குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின கொடியேற்று விழா நடக்கிறது. கலெக்டர் சந்திப் நந்தூரி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இதற்காக மைதானத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. குடியரசு தின விழாவில் போலீஸ் சார்பில் அணிவகுப்பு நடத்தி செல்ல உள்ள ஆயுதப்படை போலீசார் இன்று ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி எஸ்.பி.அருண் பாலகோபாலன்  தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தி பயிற்சி பெற்றனர்.போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை எஸ்.பி., பார்வையிட்டார்.  இதேபோல் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்வில் டிஎஸ்பி பிரகாஷ் பங்கேற்று சிறப்பித்தார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள், மயிலேறும் பெருமாள், ஈஸ்வரமூர்த்தி, சக்திவேல் மற்றும் நங்கையார் மூர்த்தி ஆகியோர் அணி தலைவர்களாக ஆயுதப்படை ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களின் அணிவகுப்பு, பின் அவர்களை தொடர்ந்து, ஊர்க்காவல் படையினர், என்.சி.சி ஆகியோர் அணிவகுப்பு செய்தனர். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.
இந்த அணிவகுப்பு ஒத்திகை ஆய்வில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், தூத்துக்குடி பிரகாஷ், நில மோசடி தடுப்பு பிரிவு பிராதபன், காவல் ஆய்வாளர்கள் மத்திய பாகம் ஜெயப்பிரகாஷ், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo