Onetamil News Logo

வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய குற்றவாளி கைது மேலும் 5 பேருக்கு வலைவீச்சு

Onetamil News
 

வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய குற்றவாளி கைது மேலும் 5 பேருக்கு வலைவீச்சு


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய குற்றவாளி கைது மேலும் வழக்குப்பதிவு செய்து 5 பேரை போலீசா தேடி வருகிறார்கள். 
பசுபதிபாண்டியன் உறவினர் தூத்துக்குடி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் பிரதீப் பாண்டியன் (23), இவா், தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலராக உள்ளாா்.
தற்போது அவா் குடும்பத்துடன் அந்தப்  பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். வீட்டில் வைக்கப்பட்டிருந்த நவீன நாட்டு வெடிகுண்டு பராமரிப்பின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு நேற்று மாலை திடீரென வெடித்தது.போன்ற சப்தம் கேட்டதால் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில் தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளா் கலை கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தனர்.அங்கு அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் வெடித்திருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் சுபாஷ் பண்ணையாரை வெடிகுண்டு வீசி கொள்ள சதி திட்டம் தீட்டியிருப்பது அம்பலமானது. 
இச்சம்பவம் குறித்து ;ரூரல் டிஎஸ்பி கலை கதிரவன் அதிரடி உத்தரவினால் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து, வீட்டின் உரிமையாளரான, பிரதீப் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும்  5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo